Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வலுப்பெறும் இந்தியா-ஓமன் உறவு! பிரதமர் மோடிக்கு ஓமனில் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

Subscribe to Oneindia Tamil

மஸ்கட்: பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமனில், The First Class of the Order of Oman எனும் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டிருக்கிறது. நெல்சன் மண்டேலா, ராணி எலிசபெத் உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு பிறகு, இந்த விருதை பெறும் தலைவர் என்கிற பெருமையை பிரதமர் மோடி பெற்றிருக்கிறார்.

இந்த உயரிய கௌரவத்தை, இரு நாடுகளின் தொன்மையான நட்பிற்கும், இந்தியா மற்றும் ஓமன் மக்களின் 140 கோடி பேரின் பரஸ்பர அன்பு, பாசத்திற்கும் அர்ப்பணிப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Oman India Gulf

அமெரிக்காவின் வரி பிரச்சனை இந்திய பொருளாதாரத்தை நெருக்கி வரும் நிலையில், மாற்று நாடுகளுடனான வர்த்தக விரிவாக்கத்தை மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இந்நிலையில்தான் பிரதமர் ஓமன் பயணித்திருக்கிறார். இந்தியா ஓமனுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் மேற்கு ஆசியாவில் தனது ஏற்றுமதிப் பங்களிப்பை அதிகரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. புதிய சந்தைகளைப் பெறுவதற்கும், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மைக்கும் ஈடுகொடுக்கும் வகையில், விரைவாக தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் இந்த ஒப்பந்தம் பயன்படும்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பிறகு, மேற்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியா மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய வர்த்தக ஒப்பந்தம் இதுவாகும். இதன் மூலம் இந்தியப் பொருட்கள் அரபு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க சந்தைகளுக்கு எளிதாகச் சென்றடைய வழிவகுக்கும். ஓமன் ஏற்கனவே அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் வைத்துள்ளது. எனவே, ஓமன் வழியாக இந்தியப் பொருட்கள் அமெரிக்காவிற்கு வரி இன்றி செல்ல வாய்ப்புள்ளது. குறிப்பாக இயந்திரங்கள், நகை, அரிசி, இரும்பு மற்றும் அழகு சாதனப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் ஓமனுக்கான இந்திய ஏற்றுமதி 2 பில்லியன் டாலரிலிருந்து 6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்த புதிய ஒப்பந்தம் இந்தியத் தொழிற்சாலைகளின் போட்டித்திறனை மேம்படுத்தும்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு உயரிய விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. ஓமன் சுல்தான் ஹைத்தம் பின் தாரிக், மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய 'ஓமன் விருது (முதல் வகுப்பு)' வழங்கி கௌரவித்தார். இந்தியா-ஓமன் உறவுகளை வலுப்படுத்தியதில் பிரதமர் மோடியின் சிறப்பான பங்களிப்பு மற்றும் அவரது தொலைநோக்கு தலைமைத்துவத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த உயரிய கௌரவத்தை, இரு நாடுகளின் தொன்மையான நட்பிற்கும், இந்தியா மற்றும் ஓமன் மக்களின் 140 கோடி பேரின் பரஸ்பர அன்பு, பாசத்திற்கும் அர்ப்பணிப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமரின் ஓமன் பயணத்தின்போது, இரு நாடுகளின் 70 ஆண்டுகால இராஜதந்திர உறவுகள் நிறைவடைந்த சமயத்தில் இவ்விருது வழங்கப்பட்டதால், இருதரப்பு நட்புக்கு இது கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+