இரத்தம் + தியாகம்.. இந்தியா - இஸ்ரேலை பிரிக்க முடியாது.. நெதன்யாகுவுடன் கைகோர்த்த மோடி!
ஜெரூசலம்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் சென்ற அவருக்கு அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு பயணிப்பது 2வது முறையாகும். இதற்கு முன்பாக 2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இஸ்ரேல் சென்றிருந்தார்.
இதன்பின் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்தது. அதேபோல் பிரதமர் மோடி மற்றும் நெதன்யாகு இடையில் நல்ல நட்பும் இருந்து வருகிறது. இதனையடுத்து இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச வந்தார். அப்போது இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன்பின் பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா இஸ்ரேலை முறையாக அங்கீகரித்த அதே நாளில் தான் நான் பிறந்தேன். இஸ்ரேலால் நான் ஈர்க்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. என்னை ஈர்த்த ஒரு நாட்டிற்கு மீண்டும் வருவதோடு மட்டுமல்லாமல், நம் சமூகங்களுக்கிடையேயான பழங்காலப் பிணைப்புகளைக் கொண்டாடுவதற்கும், நம் மக்களுக்கு வலிமையான, பாதுகாப்பான எதிர்காலத்தை நிலைநாட்டு வந்துள்ளேன்.
இஸ்ரேல் உடனான இந்தியாவின் தொடர்பு இரத்தத்தாலும் தியாகத்தாலும் எழுதப்பட்டுள்ளது. முதல் உலகப்போரின் போது, 4,000க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் இதே பிராந்தியத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். அதேபோல் கடந்த சில ஆண்டுகளாக இந்திய மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை எட்டி இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் உலகின் டாப் 3 பொருளாதார நாடுகளில் இந்தியா இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளோம். இந்திய அரசு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக கடுமையாக பணியாற்றி வருகிறது. அதேபோல் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக தீவிரவாத பிரச்சனைகள் இருந்து வந்தது. 26/11 சம்பவத்தில் எண்ணற்ற இந்திய உயிர்களை தீவிரவாதத்தில் இழக்க நேர்ந்தது. அதேபோல் இஸ்ரேலிலும் நடந்தது.
எந்தவொரு சூழலிலும் தீவிரவாதத்திற்கு எதிராக சமரசம் செய்து கொள்ள முடியாது. சமூகத்தில் பிரிவினைவாதத்தில் ஏற்படுத்த தீவிரவாதம் முயற்சிக்கிறது. வளர்ச்சியை தடுக்கவும், நம்பிக்கையை சீர்குலைக்கவும் முயற்சிக்கிறார்கள். உலகம் முழுவதும் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக நின்றால், அனைத்து நாடுகளிலும் அமைதியை கொண்டு வர முடியும்.
இந்தியாவில் வசித்து வரும் யூத சமூகங்கள் எந்தவித அச்சமும், ஒடுக்குமுறையும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அதேபோல் 2023 அக்டோபர் 7ல் ஹமாஸ் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு இரங்கலை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இஸ்ரேலின் வலியை இந்தியா உணர்ந்துள்ளது. இஸ்ரேலுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
-
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை! -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்











Click it and Unblock the Notifications