அபுதாபி சென்றடைந்தார் மோடி: அமீரகம் 'குட்டி இந்தியா' என புகழாரம்
அபுதாபி: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் கிளம்பிச் சென்றார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் கிளம்பிச் சென்றார். அவர் தனது பயணத்தின் துவக்கமாக அபுதாபியை அடைந்துள்ளார். இந்நிலையில் ஷார்ஜாவைச் சேர்ந்த கலீஜ் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில்,
அமீரகத்தில் 26 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அப்படி இருக்கையில் அமீரகத்திற்கு இந்திய பிரதமர் ஒருவர் 34 ஆண்டுகள் கழித்து வருவது வினோதமானது.
இந்தியாவும், அமீரகமும் ஒன்றுக்கு ஒன்று முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள் ஆகும். இப்படி தான் நான் அமீரகத்தை பார்க்கிறேன்.
அமீரகம் என் இதயத்திற்கு நெருக்கமான குட்டி இந்தியா ஆகும். இந்தியாவின் பொருளாதாரம், சக்தி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் அமீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே வலுவான உறவை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

அபுதாபியில் தலைவர்கள், தொழில் அதிபர்களை மோடி சந்தித்து பேச உள்ளார். அப்போது அவர்களை இந்தியாவில் அதிக முதலீடு செய்யுமாறு வலியுறுத்த உள்ளார். இன்று மாலை அவர் அபுதாபியில் உள்ள ஷேக் ஜயீத் மசூதிக்கு செல்கிறார்.
எரிசக்தி மற்றும் பாதுகாப்பில் இருநாடுகள் இடையேயான உறவை வலுப்படுத்த மோடி திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications