பிரான்ஸ் தேசிய தின விழாவில் பிரதமர் மோடி! அசத்தலான வரவேற்பு! இருநாட்டு வீரர்கள் அணிவகுத்து மரியாதை
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் தேசிய தினமான ‛பாஸ்டில் டே' இன்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். பிரான்ஸ் நாட்டின் படை வீரர்கள் புடைசூழ விழாவுக்கு பிரதமர் மோடி அழைத்து வரப்பட்ட நிலையில் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் சேர்ந்து அவர் இருநாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் ‛பாஸ்டில் டே' என்ற பெயரில் ஆண்டுதோறும் ஜூலை 14ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் உலக தலைவர்களை அந்நாடு சிறப்பு விருந்தினராக அழைப்பது வழக்கம். அந்த வகையில் தான் இந்த ஆண்டுக்கான தேசிய தினத்துக்கான கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று இந்தியாவில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் சென்றார். விமானத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் எலிசபெத் போர்ன் நேரில் வரவேற்றார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
அதன்பிறகு பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினர் மத்தியில் உற்சாகமாக பேசினார். யூபிஐ பணப்பரிவர்த்னை பற்றி பிரதமர் மோடி பெருமையாக கூறினார். மேலும், ‛‛பிரான்ஸில் திருவள்ளூவர் சிலை நிறுவப்படும். இது இந்தியாவுக்கான பெருமை. உலகின் பழமையான மொழி தமிழ் தான். உலகின் பழமையான மொழி இந்திய மொழி என்பதை விட நமக்கு பெரிய பெருமை வேறு என்ன இருக்க முடியும்'' என மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார்.

அதன்பிறகு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்தார். பிரதமர் மோடிக்கு அவர் இரவு விருந்து வழங்கினார். மேலும் பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் எனும் உயரிய விருதை இமானுவேல் மேக்ரான் வழங்கினார்.
இந்நிலையில் தான் இன்று பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். விழாவுக்கு பிரதமர் மோடி காரில் அழைத்து வரப்பட்டார். காரை சுற்றி பிரான்ஸ் நாட்டின் படை வீரர்கள் சூழ்ந்து வர பிரதமர் மோடி காரில் விழா நடக்கும் இடத்துக்கு வந்தார்.
அதேபோல் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அவரது மனைவியும் விழாவுக்கு காரில் வந்திறங்கினர். இதையடுத்து தேசிய தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் இருநாட்டு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

இந்த அணிவகுப்பு மரியாதையில் இந்தியாவின் முப்படை வீரர்கள் பங்கேற்று இருநாட்டு தலைவர்களுக்கும் மரியாதை செலுத்தினர். மேலும் இந்தியக் கடற்படை மூலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலான "ஐஎன்எஸ் சென்னை" இந்த விழாவில் பங்கேற்றது. இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் வகையில் இந்த நிகழ்வு நடந்தது.
பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இதற்கு முன்பு கடந்த 2009ல் இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் இந்த பங்கேற்றார். அவரை தொடர்ந்து பிரதமர் மோடி இன்று பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்த விழாவுக்கு பிறகு பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
மேலும் இமானுவேல் மேக்ரானையும் சந்தித்து தொழில், வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு துறை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அதன்பிறகு பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்து கொள்ளும் பிரதமர மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு புறப்பட்டு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications