கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு- ரூ400 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்!
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி இன்று காலை வழிபாடு நடத்தினார். மேலும் ரூ400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இத்தாலி தலைநகர் ரோம் மற்றும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு, பருவநிலை மாநாடு ஆகியவற்றில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். இம்மாநாடுகளில் பங்கேற்று விட்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார்.

இதையடுத்து நேற்று ராணுவ வீரர்களுடன் தீபாவளி திருநாளை பிரதமர் மோடி கொண்டாடினார். இன்று காலை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்றடைந்தார் பிரதமர் மோடி. அங்கு மாநில ஆளுநர் குர்மித் சிங், முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
அங்கிருந்து கேதார்நாத் சென்ற பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். பிரதமர் மோடி ஏற்கனவே பலமுறை கேதார்நாத் கோவிலில் வழிபாடு நடத்தி உள்ளார். தற்போது 5-வது முறையாக கேதார்நாத்தில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
மேலும் கேதார்நாத்தில் 2013-ம் ஆண்டு மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆதி சங்கரரின் நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். கேதார்நாத் கோவில் வளாகத்தில் 12 அடியிலான ஆதி சங்கரர் திருவுருவச் சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். கேதார்நாத் கோவிலில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.
Prime Minister Narendra Modi pays obeisance to Lord Shiva at Kedarnath temple in Uttarakhand pic.twitter.com/V9gIdrrgTo
— ANI (@ANI) November 5, 2021
மந்தாகினி ஆற்றில் பாலம், புரோகிதர்களுக்கான வீடுகள், மந்தாகினி ஆற்றில் தடுப்புச் சுவர், விருந்தினர் மாளிகைகள், மருத்துவமனை உள்ளிட்டவைகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடி கேதார்நாத் வருகையையொட்டி கேதார்நாத் கோவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. கோவிலில் மகா ருத்ரா அபிஷேகம் செய்து தேச நலனுக்காக பிரதமர் மோடி பிரார்த்தனை மேற்கொண்டார்.
பிரதமர் மோடி வருகை குறித்து கருத்து தெரிவித்த உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பிரதமர் மோடியின் வருகை எங்களுக்கு பெருமிதம் தரக் கூடியது. பிரதமர் மோடி கேதர் பாபா மீது அளவற்ற நம்பிககி கொண்டவர். பிரதமர் மோடியின் வருகையால் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications