Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்.. கையை பிசையும் பாக். பிரதமர்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) சமீப நாட்களில் இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய போராட்டங்கள் வெடித்துள்ளன. அவாமி செயற்குழு அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. போராட்டத்திற்கு, காலவரையற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தால் ஹெபாஸ் ஷெரீப் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) சமீப நாட்களில் இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய போராட்டங்கள் வெடித்துள்ளன. அவாமி செயற்குழு அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. போராட்டத்திற்கு, காலவரையற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

pok-erupts-in-anger-thousands-rally-against-shehbaz-sharif-government

இணைய சேவை துண்டிப்பு

ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒருங்கிணைப்பைத் தடுக்க, பெருமளவில் பாதுகாப்புப் படைகளை குவித்து, இணைய சேவையை துண்டித்துள்ளது பாகிஸ்தான் அரசு. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல தசாப்தங்களாக நிலவும் அரசியல் புறக்கணிப்பு மற்றும் பொருளாதார புறக்கணிப்பு ஆகியவற்றிற்கு எதிராக இந்த போராட்டம் வெடித்துள்ளதாக அவாமி செயற்குழு தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவின் 38 அம்சக் கோரிக்கை, கட்டமைப்பு சீர்திருத்தங்களை வலியுறுத்தியுள்ளது. இதில், பாகிஸ்தானில் வாழும் காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டமன்றத்தில் உள்ள 12 சட்டப்பேரவை இடங்களை நீக்க வேண்டும், மங்களா நீர்மின் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்டவை அடங்கும்.

அடிப்படை உரிமைகளுக்காக

அவாமி செயற்குழுவின் முக்கிய தலைவரான ஷௌகத் நவாஸ் மிர், முசாஃபராபாத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றுகையில், "எங்கள் போராட்டம் எந்தவொரு அமைப்புக்கும் எதிரானது அல்ல, ஆனால் 70 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் மக்களுக்கு மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளுக்கானது. போதும். உரிமைகளை வழங்கவும் அல்லது மக்களின் கோபத்தை எதிர்கொள்ளவும்," என்று கூறினார்.

போராட்டத்தையடுத்து, பல ஆயுதம் ஏந்திய வாகனங்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அணி வகுத்து செல்வதை பார்க்க முடிகிறது. ஆயிரக்கணக்கான படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய நகரங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை போலீசார் சீல் வைத்தனர். முக்கிய இடங்களைச் சுற்றியுள்ள கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது.

சமரசம் ஏற்படவில்லை

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிர்வாகம் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும், இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றதை அடுத்து, இந்த பெருமளவிலான பாதுகாப்புப் படைகளின் குவிப்பு நடந்துள்ளது. உயர்மட்ட சலுகைகள் மற்றும் அகதிகள் சட்டமன்ற இடங்களை நீக்குவதில் குழு சமரசம் ஏற்படவில்லை என்பதால், 13 மணி நேர பேச்சுவார்த்தை முடிந்தது.

"பேச்சுவார்த்தைகள் முழுமையடையவில்லை, முடிவுகள் எட்டப்படவில்லை," என்று மிர் அறிவித்தார். பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் உறுதியளித்தார். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மக்கள், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்து சுதந்திரம் கோரி முழக்கமிடுவதைக் காண முடிந்தது.

ஷெபாஷ் ஷெரீப்புக்கு பெரும் நெருக்கடி

அரசு முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில், அமைதியான முறையில் போராட்டம் தொடரும் என்று ஏஏசி தலைவர்கள் கூறியுள்ளனர். இணையதளம் முடக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் நீண்ட காலமாக தங்கள் அரசியல் உரிமைகளுக்காக போராடி வரும் நிலையில், தற்போது நடைபெற்று வரும் போராட்டம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்புக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+