போலீஸ் ஒருவர் கொல்லப்பட்ட பாரிஸ் தீவிரவாத தாக்குதல் சந்தேக நபர் சுட்டுகொலை

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil

பாரிஸின் மத்திய பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் காயம் அடைந்துள்ளதாகவும் பிரான்ஸ் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

{image-_95727945_aslfhash'fafh.jpg tamil.oneindia.com}

இந்த தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் சந்தேக நபர் பாதுகாப்பு படைப்பிரிவுகளால் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்திய நபர், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடுவதற்கு முன்னால் கொல்லப்பட்டதாக போலீஸார் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் இடம்பெற்ற பாரிஸின் சேம்ப்ஸ் எலிஸீ பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கை தூக்கியபடி மக்கள்
Reuters
கை தூக்கியபடி மக்கள்

இந்த தாக்குதல் தீவிரவாதத்தோடு தொடர்புடையது என்று நம்புவதாக அதிபர் பிரான்சுவா ஒலாந்த் தெரிவித்திருக்கிறார்.

தங்களுடைய ஆயுதப்படையினரில் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

எஃஎப்பி செய்தி நிறுவனத்தின் தரவுகள்படி, 2015 ஆம் ஆண்டிலிருந்து 238 பேர் பிரான்சிஸில் ஜிகாதிகளின் தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்லாமிய அரசு அமைப்பால் பொறுப்பேற்கப்படும் மக்கள் பலர் மீது நடத்தப்பட்டுள்ள சமீபத்திய தாக்குதல்களுக்கு காரணமான இஸ்லாமியவாத தீவிரவாதம், பிரான்ஸ் அதிபர் தேர்தலில் முக்கியமானதொரு பிரச்சனையாக உள்ளது.

BBC Tamil
English summary
One policeman has been shot dead and two others wounded in central Paris, French police say, with their suspected attacker killed by security forces.
Please Wait while comments are loading...