துபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் நாளை பொங்கல் விழா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாய் முஸ்ரிப் பூங்காவில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் பொங்கல் விழா நாளை வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த பொங்கல் விழாவை முன்னிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கல் விழா சிறப்புடன் நடத்தப்பட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியே நடத்தப்பட இருக்கிறது.

Pongal festival is celebrates in musrip park behalf of Galatta family in Dubai tomorrow

குறிப்பாக உரியடி, கயிறு இழுத்தல், அம்பெறிதல், பலம் பார்த்தல், கல் எடுத்தல், பச்சைக் குதிரை, சில்லுக்கோடு, பல்லாங்குழி, உப்புத் தூக்கல், கிட்டிப்புள், குத்துப் பம்பரம், கோணிப்பை போட்டி, குச்சி விளையாட்டு உள்ளிட்ட விளையாட்டுக்கள் நடைபெற இருக்கிறது.

இந்த பொங்கல் விழாவில் பங்கேற்க விரும்புவோர் 050 9732562 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது வருகையை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Pongal festival is celebrates in musrip park behalf of Galatta family in Dubai tomorrow. Traditional games also will be conducted.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற