ஆபரேஷனுக்கு பின் சுவாசிப்பதில் சிக்கல்.. பேசுவதை தவிர்க்கும் போப் பிரான்சிஸ்! என்ன நடந்தது?
வாட்டிக்கன்: கத்தோலிக்க தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் பொது நிகழ்ச்சிகளில் பேசுவதை தவிர்த்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர்தான் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதாக கூறி நிகழ்ச்சிகளில் பேசுவதை போப் தவிர்த்து வருகிறார்.
86 வயதாகும் போப் பிரான்சிஸ் உலகம் முழுவதும் இருக்கும் கத்தோலிக்க மத நம்பிக்கையாளர்களின் குருவாக திகழ்கிறார். இவருக்கு கடந்த 2021ம் ஆண்டு பெருங்குடல் அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டது. அவரது குடல் சுருங்கியதால் அதன் முனையில் தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 33 செ.மீ அளவில் குடல் வெட்டி எடுக்கப்பட்டது. இதனையடுத்து நல்ல ஆரோக்யத்தோடு இருந்து போப், கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதனையடுத்து அவரை பரிசோதித்ததில் குடலில் பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மட்டுமல்லாது உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தினர். எனவே அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 7ம் தேதி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. இதனையடுத்து 16ம் தேதி வரை மருத்துவமனையில் ஓய்வு பெற்று வந்த அவர் பின்னர் வாட்டிக்கன் திரும்பினார்.
அவரை வரவேற்க காத்திருந்த மக்களுக்கு தனது கைகளை உயர்த்தி நன்றி கூறினார். இதனையடுத்து செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் வழக்கமாக நடைபெறும் ஞாயிறு தின கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார். மேலும், கிரீஸ் நாட்டில் நடந்த படகு விபத்தையும் நினைவு கூர்ந்து, உகாண்டா பள்ளியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தையும் கண்டித்தார்.
இந்த உரைக்கு பின்னர் அடுத்தடுத்த உரைகளை போப் தவிர்த்து வருகிறார். இன்று காலை நடைபெற்ற ஒரு மாநாட்டில் இவர் பேசுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக கூறி போப் இந்த உரையாடலை தவிர்த்துவிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், "நான் இன்னும் மயக்க மருந்துகளின் விளைவுகளிலிருந்து முழுமையாக வெளிவரவில்லை. எனது சுவாசம் இயல்பாக இல்லை" என்று கூறியுள்ளார். இது கத்தோலிக்க மத நம்பிக்கையாளர்களிடம் மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications