Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pope Francis: போப் பிரான்சிஸ் மரணம்! அடுத்து என்ன நடக்கும்? இறுதிச்சடங்கு எப்போது? வாடிகன் புரோடோகால் சொல்வது என்ன

Subscribe to Oneindia Tamil

வாடிகன்: கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த சில காலமாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே இவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானதாக வாடிகன் அறிவித்துள்ளது. கத்தோலிக்கத் திருச்சபை தலைவராக இருக்கும் ஒருவர் மரணம் அடைந்தால் அடுத்து என்ன நடக்கும்.. என்ன சடங்குகள் எல்லாம் பின்பற்றப்படும் என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம்.

உலகெங்கும் அதிக மக்கள் பின்பற்றும் மதங்களில் ஒன்றான கத்தோலிக்கக் கிறிஸ்துவ மதத்தின் தலைவராகப் போப்பாண்டவர் கருதப்படுவார். இந்தப் பதவியில் போப் பிரான்சிஸ் கடந்த 2013ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். 88 வயதான போப் பிரான்சிஸ் கடந்த சில காலமாகவே உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார்.

Vatican pope pope francis

போப் பிரான்சிஸ் உடல்நிலை

குறிப்பாக இரட்டை நிமோனியா மற்றும் நுரையீரல் தொற்று மிக மோசமாக அவரை பாதித்தது. மேலும், சிறுநீரகச் சிக்கலுக்கான அறிகுறிகளும் இருந்ததாகக் கூறப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இவரது உடல்நிலை மோசமான சூழலில், அவர் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சையும் பெற்றார். மருத்துவர்களின் தீவிர முயற்சியால் அப்போது இவரது உடல்நிலை சீரானது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போப் பிரான்சிஸ் தனது வழக்கமான பணிகளையும் தொடர்ந்தார். குறிப்பாக ஈஸ்டர் தினத்தில் அவர் மக்களையும் நேரடியாகச் சந்தித்தார்.

போப் பிரான்சிஸ் மரணம்

இந்தச் சூழலில் தான் அவர் இன்று எதிர்பாராத வகையில் உயிரிழந்தார். இதை வாடிகன் உறுதி செய்துள்ளது. போப் பிரான்சிஸ் ஈஸ்டர் திங்கட்கிழமை, ஏப்ரல் 21ம் தேதி தனது 88வது வயதில் வாடிகனில் உள்ள காசா சாண்டா மார்ட்டாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாக வாடிகன் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளது. கத்தோலிக்கக் கிறிஸ்துவ மதத் தலைவர் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்து வாடிகனில் என்ன நடக்கும்.. அங்குப் பின்பற்றப்படும் சடங்குகள் குறித்து நாம் பார்க்கலாம்.

போப் பதவியில் இருக்கும் ஒருவர் மரணமடையும்போது வாடிகன் interregnum எனப்படும் ​​இடைக்காலக் காலத்திற்குள் நுழைகிறது.. போப் மரணம் முதல் புதிய போப் தேர்வாகும் வரையிலான காலகட்டத்தை interregnum எனக் குறிப்பிடுவார்கள்.

வாடிகனில் என்ன நடக்கும்!

முதலில் போப் மரணத்தை வாடிகன் நகரின் வருவாய் நிர்வாகி தான் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்வார். அவர் போப் அருகே சென்று அவரை பெயரைச் சொல்லி மூன்று முறை அழைக்க வேண்டும். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என்றால் போப் மரணமடைந்ததாக அறிவிக்கப்படும். இப்போது மருத்துவ நடைமுறைகள் வந்துவிட்ட போதிலும், இன்னும் இந்தப் பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. முன்பு போப் நெற்றியில் சிறிய வெள்ளி சுத்தியலைத் தட்டும் நடைமுறையும் இருந்தது. ஆனால், 1963 உடன் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது.

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு

தொடர்ந்து போப் மரணம் குறித்து உலகெங்கும் உள்ள தேவாலயங்களுக்குத் தெரிவிக்கப்படும். இதையடுத்து உலகெங்கும் உள்ள தேவாலயங்கள் துக்கத்தில் தங்கள் மணிகளை ஒலிப்பார்கள். வாடிகனில் போப் வாழ்ந்த இல்லம் பூட்டப்படும். அவரது ஆட்சி முடிவுக்கு வந்ததைக் குறிப்பிடும் வகையில் போப் மோதிரம் மற்றும் முத்திரையை அழித்துவிடுவார்கள். தொடர்ந்து பொதுமக்களுக்கு போப் மரணம் குறித்து அறிவிக்கப்படும்.

போப் இறுதி சடங்கு என்பது அவர் உயிரிழந்து 4-6 நாட்களுக்குள் நடக்க வேண்டும். உலகெங்கும் உள்ள தேவாலயங்களில் 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக போப் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுவார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+