வீட்டில் தவறி விழுந்த போப்பாண்டவர்.. போப் பிரான்சிஸ்க்கு கையில் காயம்! என்ன நடந்தது
வாடிகன்: வாடிகன் நகரில் உள்ள காசா சாண்டா மார்டா இல்லத்தில் போப் பிரான்சிஸ் நேற்று கீழே விழுந்தார். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
கத்தோலிக்க மதத் தலைவராக போப்பாண்டவர் செயல்பட்டு வருகிறார். இத்தாலியின் வாடிகன் நகரில் போப்பாண்டவர் வசித்து வருகிறார். தற்போது போப் ஆண்டவராக பிரான்சிஸ் உள்ளார். இவருக்கு வயது 88.

வயது முதிர்வு காரணமாக போப்பாண்டவர் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறார். அதோடு கடந்த 2 ஆண்டுகளாக அவர் வீல் சேரை பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தான் போப் பிரான்சிஸ் தனது இல்லத்தில் திடீரென்று விழுந்துள்ளார். வாடிகன் நகரில் உள்ள காசா சாண்டா மார்டா இல்லத்தில் போப்பாண்டவர் நேற்று காலை விழுந்துள்ளார். இதனால் அவரது வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக எலும்பு முறிவு ஏற்படவில்லை.
இருப்பினும் இந்த காயம் என்பது பயப்படும்படியாக இல்லை. நேற்றைய தினம் காயத்தோடு 5 கூட்டங்களில் போப் பிரான்சிஸ் பங்கேற்றுள்ளார். வாடிகனில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் நோசிபோ நெளஸ்கா-ஜீன் ஜெசிலை போப்பாண்டவர் சந்தித்தார். அப்போது அவர் தனது வலது கையில் காயம் ஏற்பட்டு இருந்ததால் கவண் அணிந்திருந்தார்.
போப்பாண்டவர் சமீபகாலமாகதொடர்ந்து உடல்நல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். கடந்த மாதம் படுக்கையில் இருந்து அவர் கீழே விழுந்தார். இதில் கன்னத்தில் காயம் ஏற்பட்டது. அதற்கு முன்பாக 2022ல் போப்பாண்டவர் முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டார். அன்று முதல் சக்கர நாற்காலியை அவர் பயன்படுத்தி வருகிறார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications