நேபாளம்.. வங்கதேசம் ஸ்டைலில்.. இந்தியாவில் ஜென் ஜி புரட்சி வெடிக்கிறதா? கையை பிசையும் மோடி, அமித் ஷா
சென்னை: இலங்கை, நேபாளம் மற்றும் வங்காளதேசத்தில் இளைஞர்கள் ஒருங்கிணைந்து நடத்திய மக்கள் போராட்டங்களைப் போல டெல்லியில் நடக்கும் இந்த ஜென் ஜி போராட்டமும் மாறி உள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை இந்த CJP இயக்கம் திரட்டியுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ மதிப்பீட்டு குளறுபடிகளுக்கு எதிராக டெல்லியில் மாணவர்களும் இளைஞர்களும் முன்னெடுத்து வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
அபிஜீத் திப்கே என்பவரால் தொடங்கப்பட்ட 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) என்ற இளைஞர் அமைப்பும், பல்வேறு மாணவர் சங்கங்களும் இணைந்து ஜந்தர் மந்தரில் நடத்தி வரும் இந்த போராட்டம், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
காக்ரோச் ஜனதா கட்சி பேரணியும் வன்முறையும்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியை தொடங்கினர். தடுப்புகளை உடைத்து நாடாளுமன்றப் பகுதியை நோக்கி முன்னேற முயன்ற மாணவர்களைக் கட்டுப்படுத்த டெல்லி காவல்துறை தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.

இந்த மோதலில் 118க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், 60க்கும் மேற்பட்ட மாணவர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போராட்டம் வலுவடைந்ததால் மத்திய டெல்லிப் பகுதியில் இணைய சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன.
முக்கிய கோரிக்கைகள்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
தேர்வு குளறுபடிகளால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ₹1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
கைது செய்யப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து இவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.
மத்திய நுகர்வோர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, CJP பிரதிநிதிகளை நேரில் சந்தித்து இந்த கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்டார். இருப்பினும், கல்வி அமைச்சரின் ராஜினாமா குறித்த தெளிவான முடிவு எட்டப்படாததால் போராட்டம் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளம் ஸ்டைல்
இலங்கை, நேபாளம் மற்றும் வங்காளதேசத்தில் இளைஞர்கள் ஒருங்கிணைந்து நடத்திய மக்கள் போராட்டங்களைப் போல டெல்லியில் நடக்கும் இந்த ஜென் ஜி போராட்டமும் மாறி உள்ளது.
சமூக ஊடகங்கள் மூலம் குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை இந்த CJP இயக்கம் திரட்டியுள்ளது. இது மோடி மற்றும் அமித் ஷாவிற்கு பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது.
இருப்பினும், இது அரசாங்கத்தைக் கவிழ்க்கும் அளவிலான கிளர்ச்சி அல்ல என்றும், கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும் ஜனநாயகப்பூர்வமான போராட்டம் என்றும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மாணவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications
