கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார்.. வாடிகன் அறிவிப்பு
வாடிக்கன்: கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார். 88 வயதான போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக வாடிகன் அறிவித்துள்ளது. போப் பிரான்சிஸ் விருப்பப்படி அவரது இறுதிச் சடங்கை எளிமையாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில காலமாகவே உடல்நலக்குறைவால் போப் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தொடர்ந்து மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுக்க வேண்டி இருந்தது. குறிப்பாகக் கடந்த பிப்ரவரி மாதம் அவரது உடல்நிலை மோசமானது.

போப் பிரான்சிஸ்
இரட்டை நிமோனியா மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக அவர் போராடி வந்தார். அவருக்குச் சிறுநீரகத் தொற்று அறிகுறிகளும் கூட அப்போது ஏற்பட்டது. இருப்பினும், மருத்துவர்கள் அளித்த தீவிரச் சிகிச்சையால் அவரது உடல்நிலை சீரானது. அவர் வழக்கமான பணிகளுக்குத் திரும்பினார். குறிப்பாக ஈஸ்டர் தினத்திலும் அவர் மக்களைச் சந்தித்தார்.
இதற்கிடையே கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இப்போது காலமானார். 88 வயதான போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் காலமானார். வாடிகனில் உள்ள இல்லத்தில் போப் பிரான்சிஸ் உயிரிழந்துள்ளார். இதை வாடிகன் உறுதி செய்துள்ளது. வாடிகன் தனது ட்விட்டரில், "போப் பிரான்சிஸ் ஈஸ்டர் திங்கட்கிழமை, ஏப்ரல் 21ம் தேதி தனது 88வது வயதில் வாடிகனில் உள்ள காசா சாண்டா மார்ட்டாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்" என அறிவித்துள்ளது.
சோகம்
88 வயதான போப் பிரான்சிஸ் உயிரிழந்துள்ளது உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அடுத்த 4 முதல் 6 நாட்களில் இறுதிச்சடங்கு நடைபெறும். போப் விருப்பத்தின்படி எளிமையான முறையில் இறுதிச்சடங்கை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. உலகெங்கும் உள்ள தேவாலயங்களில் போப் பிரான்சிஸ் மரணத்தைத் தொடர்ந்து 9 நாட்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படும்.
யார் இந்த போப் பிரான்சிஸ்
இவர் கடந்த 1936ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி அர்ஜென்டினாவில் உள்ள பியூனஸ் ஐர்ஸ் என்ற இடத்தில் பிறந்தார். இவரது முழுப் பெயர் ஜோர்ஜ் மாரியோ பெர்கோலியோ. இவரின் பெற்றோர் இத்தாலியிலிருந்து அர்ஜென்டினாவுக்கு குடியேறியவர்கள். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்த போப் பிரான்சிஸ், 1969இல் கத்தோலிக்க ஆசாரியராக மாறினார். தொடர்ந்து கிறிஸ்துவ மத சேவைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
அதன் பிறகு பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்த இவர், 2001ல் கார்டினலாக நியமிக்கப்பட்டார். மேலும், 2005ல் பேனடிக்ட் XVI திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் குழுவிலும் இவர் இருந்தார். கடந்த 2013ம் ஆண்டு அப்போது போப்பாக இருந்த போப் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாகத் தனது பதவியை ராஜினாமா செய்தபோது புதிய போப்பாக இவர் தேர்வானார். அப்போது தான் "பிரான்சிஸ்" என்ற பெயர் வழங்கப்பட்டது.
எப்போதும் மக்களுடன் மக்களாக
உலக பிரச்சினைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவராகப் போப் பிரான்சிஸ் இருந்துள்ளார். கொரோனா காலத்திலும் மக்களுக்காகப் பணியாற்றியிருக்கிறார். மேலும், உலகெங்கும் நடந்து வரும் போர்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார். இது மட்டுமின்றி எப்போதும் மக்களுடன் இருந்த போப் ஆக பிரான்சிஸ் கருதப்படுகிறார். உடல்நிலை மோசமாக இருந்த போதும் வீல்சேரில் வந்து மக்களைச் சந்திப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். நிமோனியா உள்ளிட்ட உடல்நிலை பாதிப்பில் இருந்து மீண்ட போதும் கூட ஈஸ்டர் தினத்தில் இவர் மக்களை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Pope Francis died on Easter Monday, April 21, 2025, at the age of 88 at his residence in the Vatican's Casa Santa Marta. pic.twitter.com/jUIkbplVi2
— Vatican News (@VaticanNews) April 21, 2025
-
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications