போப்பாண்டவர் உடல் நிலையில் சிறு முன்னேற்றம்! கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்த வாட்டிகன்!
ரோம்: கடந்த சில ஆண்டுகளாக நிமோனியாவால் பாதிக்கப்பட்டு வந்த போப்பாண்டவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் இரட்டை நிமோனியாவால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதால் ஆக்ஸிஜன் உதவியால்தான் தற்போது வரை சுவாசித்து வருகிறார். மறுபுறம் அவர் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் கிறிஸ்தவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள 130 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு போப்தான் தலைவர். இந்த எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் 17.7% ஆகும். கி.பி 1ம் நூற்றாண்டில் போப் பதவி உருவாக்கப்பட்டது. முதல் போப்பாண்டவராக செயின்ட் பீட்டர் இருந்திருக்கிறார். அடுத்த வந்த போப் அனைவரும் இவரின் வாரிசாக கருதப்படுகிறார்கள். இப்போது போப் பதவியில் இருக்கும் போப்பாண்டவர் 266வது போப் போப் பிரான்சிஸ் (Pope Francis) ஆவார்.
கடந்த 2013ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்ட இவர், லத்தீன் அமெரிக்காவிலிருந்து வந்த முதல் போப் ஆக அறியப்படுகிறார். இவருக்கு சிறு வயது முதல் ப்ளூரிசி (Pleurisy) எனும் நுரையீரல் பிரச்சனை இருந்திருக்கிறது. எனவே நுரையீரலின் ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவர் நுரையீரல் தொற்றை எதிர்கொண்டார்.
அவருக்கு தற்போது இரட்டை நிமோனியா பிரச்சனை இருக்கிறது. அதாவது, இரண்டு நுரையீரலும் நிமோனியா பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்த அவர், வாட்டிகனிலிருந்த வெளியேறி ரோமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. தற்போது உடல் நிலை மிக மோசமானதால் பிப்.14ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் அவர் சுவாசித்து வருகிறார். அவர் பூரண குணமடைய வேண்டும் என்று உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போப்பின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக வாட்டிகன் தெரிவித்திருக்கிறது. அவர் இன்னும் ஆபத்தான கட்டத்தில்தான் இருக்கிறார். இருப்பினும் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் இருக்கிறது என வாட்டிகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications