"பிளாக் மேஜிக்.." சொந்த கட்சிக்குள்ளேயே இப்படியா.. நொந்துபோன முய்சு! அலறும் மாலத்தீவு! என்ன நடந்தது
மலே: மாலத்தீவு அதிபராக முய்சு பதவிக்கு வந்தது முதலே இந்தியா மாலத்தீவு உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே உள்ளூரில் அதிபர் முய்சுவுக்கு எதிராக அவரது சகாக்களே திரும்பியுள்ளார்களாம். இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. முய்சுவுக்கு எதிராகத் திரும்பிய அந்த அமைச்சர் யார் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாலத்தீவு நாட்டிற்கு எப்போது அதிபராக முய்சு வந்தாரோ அப்போது முதலே அவர் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரியும்.

சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட அவர் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதனால் இரு நாட்டு உறவுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
மாலத்தீவு: குறிப்பாக மாலத்தீவுக்கு உதவும் வகையில் இந்திய ஹெலிகாப்டர்களை வழங்கிய நிலையில், அதை ஆப்ரேட் செய்ய இந்திய வீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். ஆனால் அவர்களை வெளியேறச் சொன்னார் முய்சு.. அதேபோல சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்ட அவர், சின கப்பல்களையும் தங்கள் நாட்டிற்குள் அனுமதித்தார். இவை எல்லாம் இரு நாட்டு உறவுகளைக் கடுமையாகப் பாதித்தது.
இதுபோல இந்தியாவுக்கு அதிருப்தி ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் முய்சு ஈடுபட்டு இருந்த நிலையில், உள்ளூரில் முய்சுவை ஒழித்துக் கட்டும் முயற்சியில் அவரது சகாக்களே ஈடுபட்டு உள்ளார்களாம். முய்சுவுக்கு எதிராக பிளாக் மேஜிக் செய்யும் முயற்சியில் அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற ஒருவரே ஈடுபட்டு இருந்தார். இதற்கிடையே முய்சுவுக்கு எதிராகத் திரும்பிய சகா யார்.. அவரது பின்னணி என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

உள்நாட்டில் சிக்கல்: இதற்கிடையே மாலத்தீவு அமைச்சர் பாத்திமத் ஷம்னாஸ் அலி சலீம் என்பவர் அமைச்சரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் தனது சகோதரர்கள் உடன் இணைந்து மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவுக்கு எதிராக பிளாக் மேஜிக் அதாவது சூனியம் வைக்க முயன்றதாகவும் இதன் காரணமாகவே அவர் மீது சஸ்பென்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாலத்தீவு நாட்டின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சராக இருப்பவர் தான் சலீம்.. கடந்த ஜூன் 23ஆம் தேதி சலீம் உட்பட 3 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஒரு வாரம் காவலில் வைக்கப்பட்டனர். அவர் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அமைச்சராக இருந்த நிலையில், இப்போது அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மவுனம் காக்கும் மாலத்தீவு அரசு: ஷாம்னாஸ் உள்ளிட்ட 3 பேர் தொடர்பான ஒரு வழக்கை போலீசார் விசாரித்து வருவதை அந்நாட்டின் உதவி போலீஸ் கமிஷனர் அகமது ஷிஃபான் உறுதி செய்துள்ளார். அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பாக மாலத்தீவு அரசு அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மாலத்தீவு அதிபரான முய்சு அந்நாட்டின் தலைநகரான மலே அதிபராக இருந்த போது அங்கு நகர சபையின் உறுப்பினராக இருந்தவர் தான் இந்த ஷாம்னாஸ். முய்சு அதிபர் தேர்தலில் வென்ற பிறகு நகர சபையின் உறுப்பினர் பதவியை ஷம்னாஸ் ராஜினாமா செய்த நிலையில், அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்தச் சூழலில் தான் தனக்கு அமைச்சர் பதவி வழங்கிய முய்ஸுவுக்கே எதிராக ஷாம்னாஸ் பிளாக் மேஜிக் செய்துள்ளார்.
அடுத்து என்ன: மாலத்தீவைப் பொறுத்தவரை அங்கே பிளாக் மேஜிக் என்பது மிகப் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. கடந்த காலங்களில் பிளாக் மேஜிக் காரணமாக அங்கே கொலை சம்பவங்கள் கூட நடந்துள்ளன. இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் பிளாக் மேஜிக் செய்வதற்கு 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். அதேநேரம் மாலத்தீவு தண்டனைச் சட்டத்தின் கீழ் இது கிரிமினல் குற்றமாகாது. எனவே, ஷம்னாஸ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications