ஈரான் தேர்தலுக்கு ஜஸ்ட் 50 நாட்கள்தான்.. அதற்குள்ளாக அதிபர் திடீர் மரணம்
தெஹ்ரான்: ஈரானின் அரசியலமைப்பின் படி, அதிபர் இப்ராஹிம் ரெய்சி மரணத்திற்குப் பிறகு, துணை அதிபர் முகமது மொக்பர் தான் தற்காலிக தலைமையை ஏற்றுக் கொள்ள இருக்கிறாராம். ஈரான் நாட்டின் நீதித்துறை தலைவர் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் ஆகியோர் இணைந்து 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்தலை நடத்த இருக்கிறார்கள்.
நாட்டின் தற்காலிக அதிபராக இஸ்லாமியக் குடியரசின் சொத்துக்களைக் கவனித்து வரும் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் முன்னாள் அதிகாரியான முகமது மொக்பர் இருப்பார் என்பது உறுதியாகி உள்ளது.

ஈரான் நாட்டின் எட்டாவது அதிபர் இப்ராஹிம் ரெய்சி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் இன்று அகால மரணம் அடைந்தார். முன்னதாக இப்ராஹிம் ரெய்சி ஈரான் நாட்டின் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் ஆவார். கடந்த 2017-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய இப்ராஹிம் ரெய்சி, கடந்த 2021-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 62 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
ஈரான் நாட்டின் மூத்த தலைவர் பொறுப்பை கவனித்து வரும் அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்ததாக அந்த பொறுப்பை இப்ராஹிம் ரெய்சி அல்லது அயத்துல்லா அலி காமெனி மகன் முஸ்தபா ஆகிய இருவரில் ஒருவர் ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இனி காமெனியின் மகன் முஸ்தபா தான் அதிபராகுவார் என்ற தகவலும் அந்நாட்டில் உலா வருகிறது.
ஈரானில் அதிக பட்ச அதிகாரம் பெற்றவர் என்றால் அந்த நாட்டின் மதகுருதான். அயத்துல்லா அலி காமெனி என்பவர் தான் ஈரான் நாட்டின் தலைவர் ஆவார். இவருக்கு அடுத்தஇடத்தில் தான் அதிபர் வருவார்.
ஈரான் நாட்டின் உச்சபட்ச அதிகாரம் படைத்த அயத்துல்லா அலி காமெனிதான், இரான் நாட்டின் ஆன்மீகம், அரசியல் நிர்வாகம், நீதி நிர்வாகம், பொருளாதாரம், பொதுத் தேர்தல், வெளியுறவு விவகாரம், கல்வி, இராணுவம் போன்றவற்றில் அதிபருக்கு மேலாக இறுதி முடிவு எடுப்பார்.
ஈரானில் அதிபர் என்பவர் வழக்கமான நிர்வாக ரீதியாக எல்லா அதிகாரமும் பெற்றவராகஇருக்கிறார். ஈரானில் அன்றாட அரசியல், நிர்வாகம், நாடாளுமன்றம் என எல்லாவற்றிலும் அதிபருக்கு உள்ளது. ஒரு அதிபராக நாட்டை நிர்வகித்து வந்த இப்ராஹிம் ரெய்சி இறந்துவிட்டதால், இனி அந்நாட்டு சட்டப்படி புதிய அதிபரை 50 நாளில் தேர்வு செய்ய வேண்டும்.
ஈரான் நாட்டின் நீதித்துறை தலைவர் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் ஆகியோர் இணைந்து 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்தலை நடத்த இருக்கிறார்கள். நாட்டின் தற்காலிக அதிபராக இஸ்லாமியக் குடியரசின் சொத்துக்களைக் கவனித்து வரும் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் முன்னாள் அதிகாரியான முகமது மொக்பர் இருப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications