இதுதான் இந்தியாவின் அடையாளம்.. போலந்தில் பிரதமர் மோடி சொன்ன உடன்.. மொத்த அரங்கமும் அதிர்ந்தது
வார்சா : இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி போலந்து வந்துள்ளார். போலந்து நாட்டின் வார்சாவில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, இரக்கம் என்பது இந்தியர்களின் அடையாளங்களில் ஒன்றாகும். எந்த நாட்டில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும், முதலில் உதவி செய்யும் நாடு இந்தியாதான். இது போருக்கான நேரம் அல்ல என்று பேசினார்.
மொரார்ஜி தேசாய்க்கு பிறகு, கடந்த 45 ஆண்டுகளில் முதல்முறையாக போலந்து நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்துள்ளார். அவருக்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று போலந்து நாட்டின் அதிபர் ஆண்டிரசெஜ் டூடா, பிரதமர் டொனால்டு டஸ்க் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசுகிறார். இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவது குறித்து அந்நாட்டின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசுகிறார்.

இதனிடையே வார்சாவில் உள்ள இந்திய வம்சாவளியினர்,மற்றும் தொழில் அதிபர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். இந்திய வம்சாவளியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், " இங்குள்ள இயற்கை காட்சிகளம், உங்களின் உற்சாகமும் மிகவும் அற்புதமாக இருந்தது. நீங்கள் இங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தீர்கள். இதற்காக உங்கள் அனைவருக்கும் நான் நிச்சயம் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
45 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு இந்தியப் பிரதமர் போலந்திற்கு வந்திருக்கிறார்... சில மாதங்களுக்கு முன்பு நான் ஆஸ்திரியாவுக்குச் சென்றேன், அங்கேயும், 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இந்தியப் பிரதமர் வருகை தந்தார். புதிய இந்தியாவின் கொள்கை என்பது,. எல்லா நாடுகளுடனும் நெருக்கத்தை பேணுவதுதான்... இன்று இந்தியா அனைவரின் வளர்ச்சியை பற்றித்தான் பேசுகிறது.. இன்று உலக நாடுக எல்லாம் இந்தியாவை 'விஸ்வபந்து' (உலகத்திற்கே நட்பு நாடு) என்று மதிக்கிறது..."
இந்தியாவில் ஜாம் சாஹிப் நினைவு இளைஞர் செயல் திட்டம் தொடங்கப்பபடும். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, 20 போலந்து இளைஞர்கள், இந்தியாவுக்கு வருமாறு அழைப்போம். இதன் மூலம் போலந்து இளைஞர்கள் இந்தியாவைப் பற்றி நிறைய விஷயங்களை அறிந்து கொள்வார்கள். உதாரணமாக கோலாப்பூர் நினைவுச்சின்னம். கோலாப்பூர் அரச குடும்பத்திற்கும் போலந்து நாட்டிற்கு மக்கள் தரும் மரியாதையை அறிந்து கொள்வார்கள்.
இரக்க குணம் என்பது இந்தியர்களின் அடையாளங்களில் ஒன்று. எந்த நாட்டில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும், முதலில் உதவி செய்யும் நாடு இந்தியாதான்... கோவிட் வந்தபோது, இந்தியா தான் முதலில் மனிதநேயத்துடன் நடக்க வேண்டும் என்று கூறி அதன்படி செயல்பட்டது... மற்ற நாடுகளின் குடிமக்களுக்கு இந்தியா உதவி வருகிறது.. .இந்தியா புத்தரின் பாரம்பரியத்தை உறுதியாக நம்புகிறது. அதன்படியே போரை அல்ல சமாதானத்தையே இந்தியா எப்போதும் நம்புகிறது...இந்தியா இந்த உலகத்தில் அமைதியை ஆதரிக்கும் நாடு. இது போருக்கான நேரம் அல்ல என்பது தெளிவாகிறது...இந்தியா எப்போதுமே போரின் மீது அல்லாமல் இராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று நம்புவதுடன் அதில்தான் எப்போதும் கவனத்தை செலுத்துகிறது.

உக்ரைனில் போரினால் தாக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு நீங்கள் பெரிய உதவி செய்தீர்கள்... அவர்களுக்கு வேண்டிய நிறைய உதவிகளை போலந்து மக்ககளாகிய நீங்கள் செய்தீர்கள்... போலந்து அரசு இந்திய மாணவர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கியது. போலந்து அரசு எங்கள் மாணவர்களுக்கு எல்லைகளை உடனடியாக திறந்தது... இன்று அதற்காக நான் உங்கள் அனைவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். போலந்து அரசு மற்றும் மக்களுக்கு 140 கோடி இந்தியர்கள் சார்பாக உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் பிராட்பேண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 940 மில்லியனைத் தாண்டி இருக்கிறது., அதாவது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் சேர்த்து எந்த அளவு மக்கள் இருப்பார்களோ, அந்த அளவு உள்ள மக்களுக்கு இந்தியாவில் வெறும் 2 ஆண்டுகளில் 5ஜி நெட்வொர்க்கை அனைத்து மாவட்டங்களிலும் சென்றடையச் செய்திருக்கிறோம். இந்தியாவில் நாங்கள் இப்போது, 'மேட் இன் இந்தியா' மற்றும் 6ஜி நெட்வொர்க்கிற்காக வேலை செய்து வருகிறோம்.

போலந்து நாட்டில் உள்ள மூன்றில் ஒரு பங்கிற்கு சமமான மக்கள், தினமும் (இந்தியாவில்) மெட்ரோவில் பயணம் செய்கிறார்கள்... 2023ம் ஆண்டில் உலக வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 16% க்கும் அதிகமாக இருந்துள்ளது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கு வெகு தொலைவில் இல்லை. சமூக பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவும் போலந்தும் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவின் தொலைநோக்கு பார்வை உலகளாவியது. இந்தியாவின் கலாசாரம் உலகளாவியது. நம் முன்னோர்கள் நமக்கு வசுதைவ குடும்பகம் என்ற மந்திரத்தை வழங்கி உள்ளது. அதனால் நாம் உலகத்தையே ஒரே குடும்பமாக கருதுகிறோம் " இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விஷயங்கள் குறித்து இந்திய வம்சாவளியினருடன் பேசினார்.












Click it and Unblock the Notifications