புருனே சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு! சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா.. பயணத்தின் நோக்கம் இதுதான்
பண்டார் செரி பெகவான்: இரு நாட்டு பயணத்தின் முதல் கட்டமாக புருனே சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவுடன் பிரதமர் மோடி இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்கிறார். இதன் மூலம் தென் சீன கடல் வழியாக தடையற்ற வர்த்தகத்தை இந்தியாவால் உருவாக்க முடியும்.
தென் கிழக்கு ஆசியாவில் உள்ள புருனே மற்றும் சிங்கப்பூருக்கு 3 நாள் அரசு முறைப் பயணத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார். இப்பயணத்தின் முதல் கட்டமாக அவர் புருனே நாட்டை சென்றடைந்தார். புருனே நாடு கடந்த 1984ம் ஆண்டு பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியா, புருனே இடையே தூதரக உறவு நீடிக்கிறது. இருதரப்பு உறவு 40 ஆண்டுகளை கடந்த போதிலும், இதுவரை இந்தியாவிலிருந்து எந்த பிரதமரும் புருனேவுக்கு சென்றதில்லை.

அந்த வகையில், புருனே சென்ற முதல் இந்திய பிரதமர் என்பதால் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புடன் மரியாதை அளிக்கப்பட்டது. புருனே பட்டத்து இளவரசர் ஹாஜி அல் முஹ்ததீ பில்லா, பிரதமர் மோடியை வரவேற்றார். அங்கு சென்றதும் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், ''நமது இரு நாடுகளுக்கு இடையே வலுவான உறவுகளை எதிர்நோக்குகிறோம்.

குறிப்பாக, வணிக, கலாச்சார தொடர்புகளை மேம்படுத்துவதில் ஆவலுடன் உள்ளேன்’’ என பதிவிட்டார். அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தங்கும் ஓட்டலுக்கு வந்த இந்திய வம்சாவளியினர் அங்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மாலையில், இந்திய தூதரகத்தின் புதிய வளாகத்தை திறந்து வைத்த மோடி, இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார்.

பிரதமர் மோடி, புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போகியா இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது. இதில், பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, விண்வெளி தொழில்நுட்பம், சுகாதார ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் புருனேயுடன் இந்தியாவின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் பேசுகிறார்கள்.

புருனேவைத் தொடர்ந்து இன்று சிங்கப்பூர் செல்லும் பிரதமர் மோடி, சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் மற்றும் பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் லீ சியென் லூங் ஆகியோரை சந்திக்கிறார். பல்வேறு தொழிலதிபர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.

புருனே தென்சீனக்கடல் பகுதியில் அமைந்திருப்பதால், முக்கியமான நாடாக பார்க்கப்படுகிறது. இந்நாட்டுடன் உறவை வளர்த்துக்கொள்வதன் மூலம், தென் சீன கடல் பகுதி வழியாக தடையற்ற வர்த்தக பாதையை இந்தியாவால் உருவாக்க முடியும். அதன் அடிப்படையில் பிரதமர், புருனேவுக்கு சென்றிருக்கிறார். அதேநேரம், இந்த பயணத்தை சீனா அவ்வளவாக ரசிக்காது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications