ஜி7 மாநாடு.. போப்பை கண்டதும் கட்டியணைத்த பிரதமர் மோடி! ஜப்பான் இந்தியாவில் செய்யப் போகும் சம்பவம்.!?
ரோம்: இத்தாலியில் நடைபெறும் ஜி7 மாநாட்டுக்காக ரோம் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, போப் பிரான்சிஸை சந்தித்தார். அப்போது அவரை கட்டியணைத்து மகிச்சியை வெளிப்படுத்திய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு ஜி 7 மாநாடு இத்தாலில் நடைபெறும் என கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் ஜி7 அமைப்பில் உள்ள அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து நாடுகள் பங்கேற்றுள்ளன

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி: நேற்று காலை இத்தாலியின் பிரின்டிசி விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்கரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி7 உச்சி மாநாடு: 50வது G7 உச்சி மாநாடு ஜூன் 13 முதல் 15, 2024 வரை மாநாடு நடக்கும் நிலையில், ரஷ்யா-உக்ரைன் மோதல், மத்திய கிழக்கு பிரச்சினைகள், காலநிலை மற்றும் ஆற்றல் இணைப்புகள், இடம்பெயர்வு, உணவு பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரதம மந்திரி நரேந்திர மோடி, இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார்.
போப் பிரான்சிஸ்: மேலும், ரஷ்யாவிற்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்க அமெரிக்கா திட்டமிடுவது மற்றும் ரஷ்யாவுடனான உறவுகள் தொடர்பாக சிறிய சீன வங்கிகளுக்கு G7 எச்சரிக்கைகளை வெளியிடுவது ஆகியவை குறித்து இரு அமர்வுகளில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் போப் பிரான்சிஸை பிரதம மோடி சந்தித்து பேசினார். வீல் சேரில் அமர்ந்திருந்த அவரை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினர். போப்பும் மோடியை அணைத்து நன்றி கூறினார். போப் பிரான்சிஸை இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
ஜப்பான் பிரதமர்: இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலியின் அபுலியாவில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார். ஜப்பான் மூலம் இந்தியாவில் 5 டிரில்லியன் யென் முதலீட்டு மதிப்பைக் கொண்ட மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டம் குறித்து அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்தியா-ஜப்பான் உறவுகளை சிறப்பிக்கும் வகையில், வணிகத்தை வலுப்படுத்துதல், அரசாங்க உறவுகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் பற்றி பேசியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தலைவர்களுடன் சந்திப்பு: தொடர்ந்து ஜி7 மாநாட்டின் அவுட்ரீச் அமர்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். AI-ன் பயன்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவை இந்தியா எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது என்பது பற்றி அவர் பேசினார். முன்னதாக அவரை இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி வரவேற்றார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோரை இத்தாலியில் அவர் சந்தித்தார்.












Click it and Unblock the Notifications