உயிரை கையில் பிடித்து ஓடிய பிரதமர் ஷேக் ஹசீனா! வங்கதேசத்தில் புரட்சி வெடிக்க என்ன காரணம் பின்னணி

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேசத்தில் நடைபெறும் போராட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளார். அவர் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு வங்கத்தில் தஞ்சம் அடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. பங்களாதேஷ் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான கனோபாபனுக்குள் நூற்றுக்கணக்கானோர் நுழைந்து உள்ளனர். அங்கே வீட்டை சூறையாடும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஒரே ஒரு இடஒதுக்கீடு சட்டம்தான் அங்கே இந்த போராட்டம் நடக்க முக்கிய காரணம் ஆகும்.. அது என்ன சட்டம்?

வங்கதேசத்தில் நடக்கும் போராட்டம் மற்றும் கலவரத்தில் குறைந்தது 98 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பிரதமர் ஹசீனா பதவி விலகக் கோரி பல்லாயிரக்கணக்கானோர் அங்கே ஒரு வாரத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். கடந்த ஜூலை 19 கொண்டு வரப்பட்ட அரசு வேலைகளுக்கான இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்த தொடங்கினர். இதில் 98 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

bangladesh sheikh hasina

போராட்டம் ஏன்?:

கடந்த மாதம் பிற்பகுதியில் தொடங்கிய போராட்டங்கள் தற்போது நாட்டிலேயே மிகப்பெரிய போராட்டமாக மாறி உள்ளது. டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஆர்வலர்கள், பொதுமக்கள் vs காவல்துறை, ஆளும்கட்சி ஆதரவாளர்கள் இடையிலான கலவரமாக இந்த போராட்டம் மாறி உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் 1971ல் நடத்திய சுதந்திரப் போரில் ஈடுபட்ட படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசாங்க வேலைகளில் 30 சதவீதம் வரை இடஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது அப்போது போரில் கலந்து கொண்ட படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசாங்க வேலைகளில் 30 சதவீதம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதை எதிர்த்தே அங்கே போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு அமைப்பு பாரபட்சமானது என்றும், பிரதமர் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் மாணவர்கள் முதலில் போராட்டத்தில் குதித்தனர். டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள்தான் முதலில் போராட்டத்தில் குதித்தனர். .

இடஒதுக்கீட்டை நீக்க வேண்டும்.. அதற்கு பதிலாக சாதாரண மெரிட் சிஸ்டம் வேண்டும் என்றும் அறிவித்து இவர்கள் போராட்டம் செய்ய தொடங்கினர். இந்த போராட்டம் தற்போது உச்சம் அடைந்து உள்ளது. இடஒதுக்கீடு மட்டுமின்றி 15 வருடங்களாக ஹசீனா ஆட்சி மீது அதிருப்தியில் இருந்த மக்கள் விலைவாசி தொடங்கி பாதுகாப்பு வரை பல விஷயங்களை குறிப்பிட்டு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் போராட்டம் தற்போது அங்கே அரசுக்கு எதிரான போராட்டமாக மாறி உள்ளது.

அங்கே போராட்டங்கள் இடஒதுக்கீடு பிரச்சினைக்கு அப்பால் அந்நாட்டு அரசாங்க எதிர்ப்பு இயக்கமாக மாறி உள்ளது, திரைப்பட நட்சத்திரங்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் உட்பட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் ஆதரவைப் பெற்று பெரிய போராட்டமாக மாறி உள்ளது. ராப் பாடல்கள் மற்றும் சமூக ஊடக பிரச்சாரங்கள் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வரும்ஹசீனா.. ஜனவரியில் நான்காவது முறையாகத் தொடர்ந்து ஆட்சியைப் பிடித்தார். பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியால் புறக்கணிக்கப்பட்ட தேர்தல்கள் மூலம் எளிதாக தேர்தலில் வென்றார். அரசு நிறுவனங்கள் மூலம் அதிகாரத்தை நிலைநிறுத்துதல் மற்றும் எதிர்ப்பை அடக்குதல் போன்ற குற்றச்சாட்டுகளை சந்தித்து வந்த.. இவர் சர்வாதிகார ஆட்சி செய்வதாகபுகார்வந்தநிலையில்.. வங்கதேசத்தில் இடஒதுக்கீடு போராட்டம் வந்து தற்போது அது மக்கள் புரட்சியாக மாறி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+