ஞானஸ்நானம்: லேஸ் கவுனில் அசத்தலாக வந்த 'குட்டி இளவரசர்' ஜார்ஜ்
லண்டன்: மத்திய லண்டனில் உள்ள புனித ஜேம்ஸ் அரண்மனையில் குட்டி இளவரசர் ஜார்ஜுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கடந்த ஜுலை மாதம் 22ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஜார்ஜ் லூயி அலெக்சாண்டர் என்று பெயர் வைத்தனர்.
இந்நிலையில் குட்டி இளவரசருக்கு மத்திய லண்டனில் உள்ள புனித ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயத்தில் நேற்று ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது.

ஜார்ஜ்
குட்டி இளவரசருக்கு ஜோர்டான் ஆற்று நீரை பயன்படுத்தி கேன்டர்பரியின் ஆர்ச் பிஷப் ஞானஸ்நானம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொண்டார்.

காட் பேரண்ட்ஸ்
இளவரசர் ஜார்ஜின் காட் பேரண்ட்ஸாக இளவரசர் வில்லியமின் உறவினர் ஜாரா டின்டால் உள்பட 7 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின்போது ஜார்ஜ் அழுகாமல் சமத்தாக இருந்துள்ளார்.

ராணியை பார்த்து
ஞானஸ்நானத்திற்காக தேவலாயத்திற்குள் நுழையும்போது அங்கு அமர்திருந்த ராணியைப் பார்த்து ஜார்ஜ் கையசைத்தார். அதாவது வில்லியம் தனது குழந்தையின் கையை அசைத்தார்.

சமத்து இளவரசர்
ஞானஸ்நானம் நிகழ்ச்சி முடிந்த பிறகு ஜார்ஜை தூக்கிக் கொண்டு அரண்மனைக்கு செல்லும் வில்லியம், கேட் மிடில்டன். இந்த நிகழ்ச்சியில் கேட்டின் தங்கை பிப்பா மிடில்டன் கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications