டயானா.. காதல் இளவரசி, புன்னகை அரசி.. மறக்க முடியாத "மகாராணி"
லண்டன்: ஆமா, இவ பெரிய இளவரசி டயானா பாரு.. என்று இன்றும் கூட கிண்டலாக பலர் பேசுவதைக் காணலாம். அந்த அளவுக்கு டயானா என்ற பதம் உலக மக்களின் மனதில் புதைந்து போன ஒன்று.
டயானா என்றால் புன்னகை, டயானா என்றால் அழகு, டயானா என்றால் பேஷன், டயானா என்றால் அன்பு, டயானா என்றால் அறிவு என்று மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவர் டயானா.
இங்கிலாந்து வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் டயானாவுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. சரித்திரம் படைத்த வரலாறு அவருடையது.
தொட்டால் போச்சு என்று உலகமே அன்று எச்ஐவி பாதித்த, எய்ட்ஸ் பாதித்தவர்களை விட்டு தூர விலகி நின்றபோது அவர்களைத் தொட்டுப் பேசி மனித நேயத்தை வெளிப்படுத்தி உலக மக்களிடையே நிலவி வந்த மூட நம்பிக்கையை தகர்த்தெறிந்தவர் டயானா.

அன்புக்கு அடிமை
அன்புக்கு மட்டுமே இவர் அடிமையானவர். இவரைப் பற்றி பெருமையாக பேச நிறைய உண்டு.. அவரைப் பற்றிய சர்ச்சைகளை மறந்து விட்டுப் பார்ததால், டயானா ஒரு அருமையான இளவரசி மட்டுமல்ல, அருமையான தாயும் கூட. இளவரசியாக இருந்த அவர் மகாராணி போல வாழ்ந்து மறைந்தார் என்பதே உண்மை.

உலகமே அழுதது
இன்று டயானாவின் நினைவு தினம். இதே நாளில்தான் 1997ம் ஆண்டு பாரீஸில் நடந்த மிகப் பயங்கரமான கார் விபத்தில் டயானா மரணத்தைத் தழுவினார். டயானா மறைவுக்காக உலகமே அழுதது....! டயானாவின் நினைவாக அவர் உதிர்த்த சில நல் முத்துக்களைத் திரும்பிப் பார்ப்போம்...

அன்பு செலுத்துங்கள்
உங்களது வாழ்க்கையில் யாரேனும் உங்கள் மீது அன்பு செலுத்தினால், அந்த அன்புக்காக நீங்கள் எப்போதும் அவருக்கு அடிமையாக இருக்கலாம்.

குடும்பமே முக்கியம்
உலகில் எதையும் விட குடும்பமே அதி முக்கியமான விஷயம். குடும்பத்தை மறக்காதீர்கள்.

சுதந்திர ஆத்மா
சுதந்திர ஆத்மாவாக சிறகடித்தப் பறக்க விரும்புகிறேன். சிலர் அதை விரும்பாமல் போகலாம். ஆனால் என் விருப்பப்படியே என் வாழ்க்கை அமைய வேண்டும்.

துன்பப்படும் மக்களுக்காக நான் இருக்கிறேன்
எங்கெல்லாம் மக்கள் துயரப்படுகிறார்களோ, துன்பத்தில் உள்ளனரோ, அங்கெல்லாம் நான் இருக்க விரும்புகிறேன். என்னால் முடிந்ததைச் செய்ய விரும்புகிறேன்.

நான் நானாக இருக்க வேண்டும்
விதிமுறைகளுக்கும், மரபுகளுக்கும் மதிப்பு உண்டுதான். ஆனால் இதயத்திலிருந்து எதுவாக இருந்தாலும் அது வர வேண்டும். தலையிலிருந்து வரக் கூடாது என்பது எனது கருத்து.

மதித்து நடங்கள்
ஒவ்வொருவரும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் தங்களுக்குக் கிடைப்பதைத் திரும்பக் கொடுக்கும் திறன் உண்டு.

பிறருக்காக இரங்குங்கள்
மற்றவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இறங்கி வர வேண்டும். பிறருக்காக இரங்க வேண்டும்.

கஷ்டப்படுபவர்களுக்கு நான் வருவேன்
யாரெல்லாம் கஷ்டத்தில் உள்ளார்களோ, அவர்கள் என்னை அழைக்கலாம். நான் எங்கிருந்தாலும், அவர்கள் எங்கிருந்தாலும் நான் ஓடி வருவேன்.

பிரதிபலன் பாராத அன்பு
எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் மற்றவர்கள் மீது கருணை, அன்பு செலுத்துங்கள். ஒரு நாள் உங்களுக்கும் அதேபோல அன்பும், கருணையும் தேடி வரும்.












Click it and Unblock the Notifications