செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி-சனிக்கிழமை நல்லடக்கம்!
வாடிகன்: கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு வாடிக்லன் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா தேவாலயத்தில் இன்று முதல் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். போப் பிரான்சிஸ் உடல், ரோம் நகரின் செயின்ட் மேரி மேஜர் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரான்சிஸ், 2013-ம் ஆண்டு போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிறிஸ்தவர்களின் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்தான் போப். லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து முதல் முறையாக போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரான்சிஸ்.

போப் பிரான்சிஸ் (போப் ஆண்டவர்), 88 வயதில் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். பொதுவாக போப் ஆண்டவர்கள் உடல், வாடிகன் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா தேவாலயத்தில்தான் நல்லடக்கம் செய்யப்படும். ஆனால் போப் பிரான்சிஸ் தமது உடலை மேரி மேஜர் பசிலிக்கா தேவாலயத்தில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தமது உயிலில் விருப்பத்தைப் பதிவு செய்திருந்தார்.
போப் பிரான்சிஸ் உடல் அவர் வசித்த காசா சாண்டா மார்டா இல்லத்தில் இருந்து இன்று செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு முதலில் கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக போப் ஆண்டவர் தேர்தலை நடத்தும் பொறுப்பு வகிக்கிற கெவின் பாரெல், வழிபாடு நடத்தினார்.
செயின் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இன்று முதல் 3 நாட்கள் போப் பிரான்சிஸ் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவர். இதனைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும். பின்னர் மேரி மேஜர் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
போப் பிரான்சிஸ் உடலுக்கு அவர் மறைந்த 6 நாட்களுக்குப் பின்னர் சனிக்கிழமை நடைபெறும் இறுதிச் சடங்கில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளன்ர். இந்திய நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. இந்த இறுதிச் சடங்கு, நல்லடத்துக்குப் பின் 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு பின்னர் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவார்.












Click it and Unblock the Notifications