செஞ்சுரி தாண்டிய பஞ்சாப் தம்பரியினரின் 90வது திருமண நாள்: லண்டனில் கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இன்றைய சூழ்நிலையில் 60 வயதை தாண்டுவதே அதிசயம். ஆனால் பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட தம்பதியினர் நூறு வயதுக்கு மேல் வாழ்வதோடு தங்களின் 90வது திருமண நாளினை கொண்டாடியுள்ளனர். உலகின் வயதான தம்பதியினர் என்ற பெருமையை பெற்றுள்ள இந்த தம்பதியினரின் வயது 213. என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? கணவர் கரம் சந்தின் வயது 110, மனைவி கட்டாரி சந்த் வயது 103. அதைத்தான் சேர்த்து சொன்னோம்.

பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஜோடி இளம் வயதிலேயே இங்கிலாந்தில் குடி புகுந்தனர். உலகிலேயே அதிக நாள்கள் கணவன்-மனைவியாக இணைந்து வாழ்ந்தவர்கள் என்ற பெருமையை கடந்த மாதம் அதிகாரப்பூர்மமாக அறிவிக்கப்பட்டன. முதல்நாள் கல்யாணம் மறுநாள் டைவர்ஸ் என்று இன்றைக்கு பலரும் வாழ்ந்து வரும் நிலையில் இந்த அதிசய தம்பதியரின் கதையை தெரிந்து கொள்ளுங்களேன்.

இளம் வயதில் திருமணம்

இளம் வயதில் திருமணம்

பஞ்சாப்பில் உள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் கரம். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கர்தரிக்கும் கடந்த 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி சீக்கிய பராம்பரியம்படி திருமணம் நடைபெற்றது. அப்போது கரமுக்கு வயது 20. கர்தரிக்கு 13.

மூன்று தலைமுறை

மூன்று தலைமுறை

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது, இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தனர் கரம்-கர்தரி தம்பதியினர்.

தற்போது வடக்கு யார்க்க்ஷைர் மாகானத்தில் பிராட்போர்ட் நகரில் இளையம மகன் பாலுடன் வசித்து வரும் இத்தம்பதியினருக்கு 8 குழந்தைகள், 27 பேரன்கள், 23 கொள்ளு பேரன்கள்.

மகிழ்ச்சியான தம்பதியினர்

மகிழ்ச்சியான தம்பதியினர்

இத்தம்பதியினர் தங்களது பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன்களுடன் 90வது திருமண நாளை உற்சாகமாக கொண்டாடினர். கரம்-கர்தரி ஜோடியினர் தங்களது 100 வயது எட்டியபோது, இங்கிலாந்து ராணி அவர்களைப் பாராட்டி கடிதம் வழங்கினார்.

காதலும் ஒற்றுமையும்

காதலும் ஒற்றுமையும்

என் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நான் பார்த்தே இல்லை. இதுதான் அவர்களது மகிழ்ச்சியான வாழ்க்கையின் ரகசியம் என்கிறார் அவர்களோடு வசித்து வரும் பால். திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து வாழ்வது என்பதில் என் பெற்றோர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். அதனால்தான் அவர்களால் ஒரு சிறு சண்டைகூட போடாமல் வாழ முடிகிறது என்கிறார்.

பெற்றோர்களே பொக்கிஷம்

பெற்றோர்களே பொக்கிஷம்

நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறும் பால், பெற்றோரை கவனித்து கொள்ளும் ஒவ்வொருவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். பெற்றோர் நம்மை பிரிந்துவிட்டால்...அவர்களோடு சேர்ந்து எல்லாம் போய்விடும் என்று கூறியுள்ளார். இன்றைக்கு பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விடும் ஒவ்வொரு பிள்ளைகளும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+