Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கெமிக்கல் ஆயுதங்கள்! ரஷ்யாவின் பிளானே வேற.." உக்ரைன் விவகாரத்தில் பாயும் அதிபர் பைடன்.. பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

உக்ரைன்: உக்ரைன் நாட்டில் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க அதிபர் பைடன் கெமிக்கல் ஆயுதங்கள் தொடர்பாக முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

Recommended Video

    Russiaவின் Chemical Weapons! Ukraine விவகாரத்தில் Joe Biden குற்றச்சாட்டு ! | OneIndia Tamil

    உக்ரைன் நாட்டில் கடந்த 4 வாரங்களுக்கு மேலாகப் போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. போர் 26ஆவது நாளாக நடைபெறும் சூழலிலும், உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் கூட ரஷ்யாவால் கைப்பற்ற முடியாத சூழலே நிலவி வருகிறது.

    உக்ரைன் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போதைய சூழலில் தெற்கு உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தின் மீது தான் ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.

     குண்டு மழை

    குண்டு மழை

    மரியுபோல் நகரின் முக்கிய வீதிகளைக் குறி வைத்து குண்டு மழையை ரஷ்யா பொழிந்து வருகிறது. உயர் துல்லியமான ஆயுதங்கள் மற்றும் கண்மூடித்தனமான வெடிமருந்துகளைப் பயன்படுத்தி முக்கியமான உள்கட்டமைப்புகளைக் குறி வைத்து ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே ரஷ்யா கெமிக்கல் ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்து வருவதாக மேற்குலக நாடுகள் குற்றஞ்சாட்டின. இதற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ள போதிலும், அந்த குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

     அமெரிக்க அதிபர் பைடன்

    அமெரிக்க அதிபர் பைடன்

    இது தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன் கூறுகையில், "புதின் அது (கெமிக்கல் ஆயுதங்கள்) குறித்து யோசித்துக் கொண்டே இருக்கிறார். இதனால் தான் புதின் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் உயிரியல் மற்றும் ரசாயன ஆயுதங்கள் இருந்ததாகப் பொய் கூறி வருகிறார். அதேபோல உக்ரைனில் உயிரியல் மற்றும் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த இரண்டையும் பயன்படுத்த அவர் சிந்தித்து வருகிறார் என்பதையே இது காட்டுகிறது. இது எல்லாம் ரஷ்யாவின் ஒரு திட்டம் தான்" என்றார்.

     கெமிக்கல் ஆயுதங்கள்

    கெமிக்கல் ஆயுதங்கள்

    கடந்த சில வாரங்களாகவே உக்ரைன் விவகாரத்தில் கெமிக்கல் ஆயுதங்கள் என்ற சொல் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. கெமிக்கல் ஆயுதங்களை வைத்திருப்பதாக இரு நாடுகளும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பைடன் போன்ற முக்கிய தலைவர்கள் இது தொடர்பாகப் பேசுவது இதுவே முதல்முறையாகும். இருந்தாலும் கூட இந்தப் போரில் கெமிக்கல் ஆயுதங்களின் பயன்பாட்டிற்கு வாய்ப்புகள் குறைவு என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

     பொருளாதாரத் தடைகள்

    பொருளாதாரத் தடைகள்

    2ஆம் உலகப் போருக்குப் பின்னர், மிகப் பெரிய போர்களில் ஒன்றாக இந்த உக்ரைன் போர் பார்க்கப்படுகிறது. புதின் நடவடிக்கையைக் கடுமையாக விமர்சிக்கும் உலக நாடுகள், உக்ரைன் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது. இருப்பினும், போர் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் தான் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போலந்து சென்று திரும்பிய நிலையில், அதிபர் பைடன் வரும் வாரம் போலந்து செல்ல உள்ளார். உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ள நிலையில், அதிபர் பைடனின் இந்த பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

     உக்ரைன் மக்கள்

    உக்ரைன் மக்கள்


    இந்த போர் காரணமாக உக்ரைன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 25% பேர் அவர்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளனர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மரியுபோல் நகரின் ஒரு பகுதியை தற்போது ரஷ்யா கைப்பற்றி உள்ளது. இதற்கிடையே மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் வீரர்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுச் சரணடைய வேண்டும் என ரஷ்யா வலியுறுத்துகிறது. இருப்பினும், இதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், போர் தொடர்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+