வீட்டை விட்டு வெளியேற தடை.. ஜன்னல் பக்கம் போகாதீங்க.. கத்தார் வாழ் இந்தியர்களுக்கு பறந்த வார்னிங்
கத்தார்: ஈரான் தொடர்ந்து தாக்குவதால் கத்தாரில் உள்ள இந்தியர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வீட்டில் ஜன்னல், பால்கனி மற்றும் திறந்தவெளி பகுதிகளில் நிற்க வேண்டாம் என்பது உள்பட பல்வேறு முக்கிய அறிவுரைகளை கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் வழங்கி உள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து கொடூரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் அரபு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, கத்தார் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
கத்தார், அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ளது. மேலும் கத்தாரில் அல் உதைத் என்ற அமெரிக்காவின் விமானப்படை தளம் உள்ளது.

இதனால் தான் அமெரிக்காவை பழி வாங்கும் வகையில் கத்தாரை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் கடந்த பிப்ரவரி 28 ம் தேதி தொடங்கியது. கடந் 2ம் தேதி அமெரிக்காவின் விமானப்படை தளத்தில் குண்டுபோட முயன்ற ஈரானின் 2 SU-24 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
6வது நாளாக தாக்குதல்
இதையடுத்து கத்தார் - ஈரான் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இன்று 6வது நாளாக கத்தார் தலைநகர் தோஹோவில் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. . கத்தாரில் இந்தியர்கள் ஏராளமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் கத்தாரில் உள்ள இந்தியர்களுக்கு சில முக்கிய அறிவுரைகளை இந்திய தூதரகம் வழங்கி உள்ளது. இதுதொடர்பாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியர்களுக்கு அறிவுரை
இந்நிலையில் தான் கத்தாரில் உள்ள இந்தியர்களுக்கு சில முக்கிய அறிவுரைகளை இந்திய தூதரகம் வழங்கி உள்ளது. இதுதொடர்பாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்
''தற்போதைய சூழ்நிலையை கருத்தி்ல கொண்டு கத்தார் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மக்கள் செயல்பட வேண்டும். கத்தாரில் உள்ள இந்தியர்கள் கண்டிப்பாக பாதுகாப்பு வழிக்காட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
* வீட்டிலேயே இருக்க வேண்டும். வீட்டுக்கு வெளியே தேவையின்றி நடமாடக்கூடாது.
* மிகவும் தேவையான சமயத்தில் மட்டுமே வெளியே வர வேண்டும்.
* வீட்டில் ஜன்னல்கள், பால்கனி, திறந்தவெளி பகுதிகளில் இருந்து விலகியே இருக்க வேண்டும்.
Important Advisory pic.twitter.com/yCu4oJFMSa
— India in Qatar (@IndEmbDoha) March 4, 2026
உதவி எண்கள்
* புதிய தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை மட்டுமே நம்ப வேண்டும்.
* இன்று முதல் 24X7 உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. +974 55647502; +974 55362508 என்ற எண்களையும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தூதகரத்தை தொடர்பு கொள்ளலாம்.
விமான பயணங்கள் பற்றி...
* கத்தார் வான்வெளி மூடப்பட்டதால் ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான இயக்கங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கத்தார் ஏர்வேஸ் மற்றும் பிற விமானங்களும் சேவையை நிறுத்தி உள்ளன. பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
* கத்தாரில் உள்ள இந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக கத்தார் அதிகாரிகளுடன் தூதரகம் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
குவைத் ஏர்போர்ட்டில் துடிதுடித்து உயிரிழந்த இந்தியர்.. ஈரானின் ட்ரோன் தாக்குதலில் பயங்கரம்! திக்திக் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்?












Click it and Unblock the Notifications