ஓவர் செலவு: அதள பாதாளத்தில் இங்கிலாந்து ராணியின் கையிருப்பு பணம்?

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தாராளமாக செலவு செய்வதால் அவரது கையிருப்பு பணம் வரலாறு காணாத அளவுக்கு குறைவாக உள்ளதாம்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பொது கணக்கு குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் நிதி நிலை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பணம்

பணம்

ராணி இரண்டாம் எலிசபெத்திடம் கடந்த 2001ம் ஆண்டில் 35 மில்லியன் பவுண்ட் இருந்தது. ஆனால் தற்போது அவரிடம் வெறும் 1 மில்லியன் பவுண்ட் மட்டுமே உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரண்மனைகள்

அரண்மனைகள்

அரண்மனைகள் எல்லாம் இடியும் நிலையில் இருக்கையில் அதை பழுது பார்க்காமல் இப்படி ராஜ குடும்பத்தினர் தாறுமாறாக செலவு செய்கிறார்கள் என்று இங்கிலாந்து எம்.பி.க்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

ஆலோசகர்கள்

ஆலோசகர்கள்

ராணியின் ஆலோசகர்கள் நிதியை முறையாக கையாளவில்லை என்றும், சிக்கன நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள தவறிவிட்டனர் என்றும் பொது கணக்கு குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ குடும்பம் கடந்த 5 ஆண்டுகளில் வெறும் 5 சதவீதம் மட்டுமே சேமித்துள்ளதாம்.

செலவு

செலவு

ராஜ குடும்பத்தினர் தங்கள் செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மார்கரெட் ஹாட்ஜ் என்ற தொழிலாளர் கட்சி எம்.பி. தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+