ரமலான் பிறை: சவுதியில் ரமலான் நோன்பு இன்று தொடக்கம்.. இந்தியாவில் நாளை முதல் தொடக்கம்
சவுதி: சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டதால் இன்று முதல் (மார்ச் 1) ரமலான் நோன்பு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பிறை தெரியாததால் ரமலான் மாதம் மார்ச் 2 இல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக ரம்ஜான் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகை மற்றும் ரமலான் மாத நோன்பு ஆகியவை பிறை தெரிவதன் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படுகிறது. உலகில் அனைத்து பகுதிகளிலும் எப்போது பிறை தெரிகின்றதோ அதை வைத்தே நோன்பு தேதி மற்றும் பண்டிகை கொண்டாடப்படும். ஒவ்வொரு பகுதிகளுக்கு இந்த தேதி ஒருநாள் வரை மாறுபடும்.

ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடிப்பது வழக்கம். சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை இவர்கள் தண்ணீர், உணவு போன்ற எதையும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். மாலை இப்தார் விருந்து வைத்து விரதத்தை முடிப்பார்கள். சவுதி அரேபியாவில் சுதைர், துமைர் ஆய்வகங்களில் ரமலான் தொடக்கத்தை குறிக்கும் பிறை தென்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் ரமலாந் புனித மாதம் நேற்று இரவு அதவாது பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிறை தெரிந்ததையடுத்து, சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள இஸ்லாமிய மக்கள் நேற்று இரவு முதல் தங்கள் தராவீஹ் தொழுகையைத் தொடங்கியுள்ளனர். இன்று மார்ச் 1 ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் நோன்பு கடைப்பிடிக்கவுள்ளனர். நேற்று இரவு முதல் ரமலான் புனித மாதம் தொடங்கும் என்பதை அங்குள்ள மத தலைவர்கள் உறுதி செய்தனர்.
அதே சமயத்தில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற பிற நாடுகளில் நேற்று பிறை தெரியவில்லை. அதனால் இன்று மார்ச் 1 ஆம் தேதி இரவு முதலே ரமலான் மாதம் தொடங்கும். பிறை நேற்று தெரியாததால் இங்கு நோன்பு பின்பற்றுவதும் ஒரு நாள் வரை தள்ளிப்போகும். அதாவது ஞாயிற்றுக்கிழமை மார்ச் 2 ஆம் தேதி முதல் நோன்பு கடைப்பிடிக்கப்படும்.
பிப்ரவரி 28 ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று பிறை தெரியாததால் ரமலான் நோன்பு மார்ச் 2ம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் முகம்மது அய்யூப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், "ஹிஜ்ரி 1446 ஷாபான்மாதம் 29ம் தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 28 - 02-2025 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
ஆகையால் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 02-03-2025ம் தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஷபே கத்ர் 27-03-2025 வியாழக்கிழமை மற்றும் 28-03-2025 வெள்ளிக்கிழமை ஆகிய இருநாட்களின் மத்தியிலும் இரவில் ஆகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications