என்னைக்குதான் விடிவு காலம் பிறக்குமோ.. இலங்கை கடற்படை அட்டூழியம்.. ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் கைது
கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை. ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் மற்றும் அவர்கள் சென்ற 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது இலங்கை கடற்படை. கைதான 22 பேரும் மன்னார் கடற்படைமுகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், முதற்கட்ட விசாரணைக்கு பிறகு மீனவர்கள் 22 பேரும் மீணவளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் இதற்கு நிரந்தர தீர்வு கோரி கோரிக்கை வைத்து வந்தாலும் இந்த பிரச்சினை முடிந்தபாடில்லை.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் பிரதமர் மோடிக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு காரைக்கால் மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படை கைது செய்து இருந்தது. அவர்கள் சென்ற 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இன்று ஒரே நாளில் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் இரண்டு விசைப்படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் மேலும் 12 ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க இரண்டு விசைப்படகுகளுடன் கடலுக்குள் சென்றுள்ளனர். அவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைதான 22 பேரும் மன்னார் கடற்படைமுகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், முதற்கட்ட விசாரணைக்கு பிறகு மீனவர்கள் 22 பேரும் மீணவளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications