இந்தியா முன்வைக்கும் ஈழத் தமிழருக்கான 13-வது திருத்தம்-அனைத்து கட்சிகளுடன் விவாதிக்க வேண்டும்: ரணில்
கொழும்பு: இந்தியா வலியுறுத்தி வருகிற ஈழத் தமிழருக்கான 13-வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்த அனைத்து அரசியல் கட்சிக்ளுடன் விவாதம் நடத்தப்பட வேண்டும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து கொழும்பில் நேற்று அதிகாரப் பகிர்வு தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் ஜேவிபி தவிர பெரும்பாலான கட்சிகள் பங்கேற்றன.

இலங்கை அனைத்து கட்சிக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கே பேசியதாவது; போலீஸ் அதிகாரம் தவிர எஞ்சிய அனைத்து அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு கொடுக்க முடியும். இது தொடர்பாக அமைச்சரவையில் என்னுடைய தீர்வு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
13-வது அரசியல் சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த தமிழ் அரசியல் கட்சிகளுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துவது போதுமானது அல்ல. அனைத்து தரப்பு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விவாதிக்க வேண்டியதும் அவசியமாகும். இலங்கையின் மாகாண சபைகள் முழுமையாக செயல்பட முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

இலங்கையின் 9 மாகாண சபைகளில் 7-; சிங்கள மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். 2-ல் தமிழர் பெரும்பான்மையினர். மாகாண சபை முறை தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் தற்போதைய குறைபாடுகள் அனைத்தும் சரி செய்யப்பட வேண்டும்.

13-வது திருத்தம் என்பது தமிழர் பெரும்பான்மையினராக வசிக்கும் மாகாண சபைகள் தொடர்பானது மட்டும் அல்ல. ஒட்டுமொத்த இலங்கைக்கும் பொருந்தக் கூடியது. ஆகையால்தான் இலங்கையின் அனைத்து தரப்பினருடன் விவாதிக்கப்பட வேண்டும். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications