வெறும் ரூ.103க்கு விற்கப்பட்ட 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பத்திரிக்கை
லண்டன்: பிரபல பத்திரிக்கை நிறுவனமான ரீடர்ஸ் டைஜஸ்ட் வெறும் ஒரு பவுண்டுக்கு அதாவது ரூ.103க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பிரபல பத்திரிக்கை நிறுவனம் ரீடர்ஸ் டைஜஸ்ட். கடந்த 1922ம் ஆண்டு டீவிட் மற்றும் லைலா பெல் வாலஸ் ஆகியோரால் துவங்கப்பட்டது ரீடர்ஸ் டைஜஸ்ட். 1960களிலேயே உலகம் முழுவதும் 23 மில்லியன் பிரதிகள் விற்பனை செய்யப்பட்டன. கடந்த 2008ம் ஆண்டு வரை அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் பத்திரிக்கையாக அது இருந்தது.

இந்நிலையில் உலகம் முழுவதும் ரீடர்ஸ் டைஜஸ்ட்டின் வியாபாரம் மிகவும் மோசம் அடைந்தது.
இங்கிலாந்திலும் கடந்த 75 ஆண்டுகளாக ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கை அச்சிடப்பட்டு விற்கப்படுகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனத்தை வெறும் ஒரு பவுண்ட் அதாவது ரூ.103க்கு மைக் லக்வெல் என்ற தொழில் அதிபர் வாங்கியுள்ளார். இந்த நிறுவனத்தை அவர் ஜான் மௌல்டனின் பங்கு நிறுவனமான பெட்டர் கேபிடலிடம் இருந்து வாங்கியுள்ளார்.
முன்னதாக அவர் ஹெச்ஐடி என்டர்டெய்ன்மென்ட் மற்று டபுள்யூபிபி ஆகியவற்றில் பெரும் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. லக்வெல்லிடம் 135 மில்லியன் பவுண்ட் சொத்துக்கள் உள்ளது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications