அகதியை கட்டியணைத்த பெண்.. மடியில் விழுந்து குலுங்கி குலுங்கி அழுது.. கடல் எல்லையில் ஒரு உருக்கம்
நீந்தி வந்த அகதிக்கு உதவிய தன்னார்வல பெண்ணுக்கு குவியும் வாழ்த்து
பிரான்ஸ்: தட்டத்தடுமாறி.. ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு அகதி ஒருவர் நீச்சலடித்து கொண்டே வந்து சேர்ந்துள்ளர்.. உயிரை கையில் பிடித்து கொண்டு கரையில் வந்து விழுந்த அவரை, ஒரு தன்னார்வல பெண், ஓடிச்சென்று வாரியணைத்து அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளார்.. இந்த போட்டோ இணையத்தில் அனைவர் மனதையும் கவர்ந்துள்ளது..!
வழக்கமாக ஒரு நாடும், மற்றொரு நாடும் எல்லைகளை வரையறுத்திருக்கும்.. இந்த எல்லைகள் கடல்வழியாகவும், நிலவழியாகவும் வரையறுத்தப்பட்டிருக்கும்.. இவைகளை தாண்டும்போது அது அத்துமீறலாகி, சட்டப்படியும் குற்றமாகிவிடும்.. இது உலக இயல்பு!
அந்த வகையில், ஆப்ரிக்க நாடான மொரோக்கோவும், ஐரோப்பிய நாடான ஸ்பெயினும் எல்லைகளை பகிர்ந்துள்ளன... கடல்வழியும், நில வழியும் இரு நாடுகளும் எல்லைகளை பகிர்ந்துள்ளன... எனினும், மொரோக்கோ நாட்டின் அங்கமாக உள்ள மேற்கு சஹாரா பகுதியை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்று பொலிசரியோ முன்னணி என்ற அமைப்பு மொரோக்கோவில் செயல்பட்டு வருகிறது.

சிகிச்சை
ஆனால், மொரோக்கா இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை... இப்படிப்பட்ட சூழலில்தான் பொலிசரியோ முன்னணி அமைப்பின் தலைவர் பஹ்ரிம் ஹலிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.. ஆனால், மொரோக்கோவில் இதற்கு போதிய சிகிச்சை வசதி இல்லை.. அதனால், ஸ்பெயினில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அனுமதிக்கும்படி பஹ்ரிம் ஹலி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

சம்மதம்
இந்த கோரிக்கையை ஸ்பெயினும் ஏற்ற, பஹ்ரிம் ஹலிக்கு தங்கள் நாட்டில் சிகிச்சை தருவதற்கு சம்மதம் சொன்னது.. ஆனால் இதற்கு மொரோக்கோ அரசு கடும் கண்டனம் தெரிவித்தது... இந்த பிரச்சனைதான், ஸ்பெயினும், மொரோக்கோவுக்கும் கொஞ்ச நாளாக ஓடிக் கொண்டிருக்கிறது.. இதனால், கடந்த ஒருவாரமாகவே ஸ்பெயின் உடனான எல்லைகளை சரிவர கவனிக்காமல் மொரோக்கோ அலட்சியம் காட்டியும் வருகிறது.

ஆப்பிரிக்கா
இதை பயன்படுத்தி கொண்டு, மொரோக்கோ, ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த சிலர் நடந்தே ஸ்பெயின் நாட்டிற்குள் அத்துமீறி வந்துவிடுகிறார்கள்.. ஒருசிலர் கடல் வழியாக நீச்சல் அடித்தும் வந்துவிடுகிறார்கள்.. அப்படித்தான் ஒருவர் மொரோக்கோவில் இருந்து கடல்வழியாகவே நீச்சல் அடித்து அகதியாக ஸ்பெயின் எல்லைக்குள் வந்துவிட்டார்.. அந்த அகதியால் நீந்தக்கூட முடியவில்லை.. வெகுதூரம் நீச்சல் அடித்து கொண்டே வந்ததால், அதிக சோர்வடைந்திருந்தார்.. கண்களைகூட திறக்க முடியவில்லை..!

பாராட்டு
அப்படியே, கரையோரத்தில் வந்து சுருண்டு விழுந்தார்.. இதை அங்கே தன்னார்வு பணிகளை மேற்கொண்டிருந்த ஒரு பெண் கவனித்துவிட்டார்.. அவர் அகதி என்று தெரிந்தும், ஓடிச்சென்று கட்டியணைத்து அரவணைத்து தாங்கி பிடித்துக் கொண்டார்,.. உடனடியாக அகதிக்கு குடிக்க தண்ணீர் தந்தார்.. இதை கண்டதும் அந்த அகதி கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.. அந்த பெண் அவருக்கு ஆறுதல் சொல்லி நம்பிக்கை ஊட்டினார்.. இந்த நெகிழ்ச்சி போட்டோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications