நவாஸ் ஷெரீப் ரிட்டர்ன்..? பரபரக்கும் பாகிஸ்தான்.. அனல் பறக்கும் அரசியல் களம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வான நிலையில் பல்வேறு ஊழல் வழக்குகளை எதிர்கொண்டு லண்டனில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமரும், அவரது அண்ணனுமான நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் இருந்தார். இவருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.
இதனால் இம்ரான்கான் பதவியை இழந்தார். எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தன. இதையடுத்து புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் தம்பியாவார்.

ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்
நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமாக இருந்த காலத்தில் பல்வேறு ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பனாமா வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. விசாரணை, நீதிமன்றத்தில் ஆஜர் என நவாஸ் ஷெரீப் அலைந்து வந்தார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

லண்டனில் சிகிச்சை
இந்நிலையில் நவாஸ் ஷெரீப் உடல்நலம் பாதிக்கப்பட்டார். 2019ல் லாகூர் உயர்நீதிமன்ற அனுமதியுடன் நவாஸ் ஷெரிப், மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்றார். 4 வாரம் மட்டும் நீதிமன்றம் அனுமதி கொடுத்த நிலையில் அவர் நாடு திரும்பவில்லை. அவர் லண்டனிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கு விசாரணைக்கு பயந்து தான் அவர் லண்டனில் தஞ்சமடைந்துள்ளதாக இம்ரான்கான் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

நாடு திரும்புகிறாரா...
இந்நிலையில் தான் பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆட்சி கவிழ்ந்துள்ளது. நவாஸ் ஷெரீப் தம்பி ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்வாகி உள்ளார். இதனால் நவாஸ் ஷெரீப் நிம்மதி அடைந்துள்ளதாகவும், விரைவில் நாடு திரும்ப விரும்புவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இன்னும் சில மாதங்களில் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

தலைவர்கள் கூறுவது என்ன
இதுகுறித்து பிஎம்எல்-என் கட்சியின் எம்பி ஜாவித் லத்தீப் கூறுகையில், ‛‛மே மாதம் முதல் வாரத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்துக்கு பிறகு அவர் நாடு திரும்புவார்'' என்றார். இதுபற்றி கட்சியின் செய்தித்தொடர்பாளரான மரியம் அவுரங்சீப் கூறுகையில், ‛‛நவாஸ் ஷெரீப் நாடு திரும்புவது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. லண்டனில் உள்ள அவரது டாக்டர் தான் பயணம் குறித்து முடிவு செய்வார். பயணம் செய்ய நவாஸ் ஷெரீப்பின் உடல் ஒத்துழைத்தால் மட்டுமே அவர் லண்டனில் இருந்து புறப்படுவார்'' என்றார்.

தேர்தலுக்கு தலைமை
இன்னொரு மூத்த தலைவர் கூறுகையில், ‛‛விரைவி்ல பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்பு நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்புவார். அவர் தலைமையில் தான் தேர்தல் சந்திக்கப்படும்'' என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தலைவர்கள் இவ்வாறு கூறினாலும் நவாஸ் ஷெரீப் நாடு திரும்புவது குறித்து அவரது தரப்பில் இருந்து எதுவும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications