'முகம் முழுக்க ரத்தம்..' தாலிபான்களுக்கு எதிராக போராட்டம்.. பெண் மீது கொடூர தாக்குதல்.. அட்டூழியம்!
காபூல்: தாலிபான் ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பெண் சமூக ஆர்வலர் மீது தாலிபான்கள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
ஆப்கனில் இருந்த கடைசி அமெரிக்க வீரரும் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அந்நாட்டை விட்டு வெளியேறினார். அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த காபூல் விமான நிலையம் தாலிபான்களின் கைகளுக்கு வந்தது.
இதனைத் தாலிபான்கள் கொண்டாடித் தீர்த்தனர். அந்நிய நாடுகள் மீது படையெடுக்க விரும்பும் நாடுகளுக்கு தங்கள் வெற்றி ஒரு பாடமாக அமையும் என்றும் தாலிபான்கள் தெரிவித்தனர்.

புதிய அரசு
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தாலிபான்கள் தலைநகர் காபூலை கைப்பற்றினர். இருப்பினும், தலைநகரைக் கைப்பற்றி 20 நாட்கள் ஆகும் நிலையிலும் கூட, இன்னும் ஆப்கனில் புதிய அரசைத் தாலிபான்களால் அமைக்க முடியவில்லை. ஆப்கனில் தாலிபான்கள் தலைமையிலான ஆட்சி குறித்துக் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு அரசை அமைப்பதில் இருந்த சிக்கல் காரணமாக புதிய அரசு குறித்த அறிவிப்பு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தாலிபான் ஆட்சி
அதேநேரம் இந்த முறை தாலிபான்களின் ஆட்சி மாறுபட்டு இருக்கும் என்று அந்த அமைப்பு தொடர்ந்து உறுதி அளித்து வருகின்றனர். இந்த முறைப் பெண்கள் உரிமை பாதுகாக்கப்படும் என்றும் பெண்கள் பள்ளி, கல்லூரி செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் தாலிபான்கள் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாகவே இருக்கிறது. முதலில் புர்கா அணியாமல் ஆண் துணை இல்லாமல் ஆப்கனை விட்டு வெளியேறக் கூடாது என அறிவித்த தாலிபான்கள், அடுத்து ஆண்- பெண் இருபாலர் படிக்கும் கல்வி முறைக்குத் தடை விதிக்கப்பட்டது.

பெண் மீது கொடூர தாக்குதல்
இந்நிலையில், தாலிபான்களின் ஆட்சிக்கு எதிராகத் தலைநகர் காபூலில் போராட்டம் நடத்திய பெண் சமூக ஆர்வலர் ஒருவர் மீது தாலிபான்கள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தாலிபான்கள் ஆட்சியில் பெண்கள் உரிமை மறுக்கப்படும் என்பதால், தாலிபான்களுக்கு எதிராக சில பெண்கள் தலைநகர் காபூலில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்படி 2ஆம் நாளாக நடைபெற்ற போராட்டத்தில் தான் தாலிபான்கள் பெண் சமூக ஆர்வலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

வன்முறையில் முடிந்த போராட்டம்
தாலிபான்கள் தாக்குதல் நடத்திய அந்த நபர் நர்கிஸ் சதாத் என்ற பெண்கள் உரிமை ஆர்வலர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். தாலிபான்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பெண்கள், ஆப்கன் அதிபர் மாளிகை நோக்கி ஊர்வலம் சென்றுள்ளனர். அதைத் தடுத்த தாலிபான்கள் அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதாகவும், அதைத் தொடர்ந்து போராட்டம் வன்முறையாக மாறியதாகவும் டோலோ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு?
ஆப்கன் அதிபர் மாளிகைக்கு முன் போராட்டம் நடத்த முயன்றதாகவும் ஆனால் அதற்கு அனுமதிக்காமல் தாலிபான்கள் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் போராட்டம் நடத்திய பெண்கள் தெரிவித்தனர். இது குறித்த வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. முன்னதாக வியாழக்கிழமை ஹெராட் என்ற இடத்தில் தாலிபானின் புதிய அரசில் பெண்களுக்கு உரியப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அப்போது செய்தியாளர்களை உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு வலியுறுத்தி தாலிபான்கள், பெண்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications