ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை மணக்கத் துடிக்கும் இங்கிலாந்து பெண்கள் – 8 பேர் சிரியா கிளம்பினர்!
லண்டன்: சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் இங்கிலாந்தை சேர்ந்த 8 மாணவிகள் சிரியாவுக்கு சென்றுள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களில், லண்டன் பள்ளியில் படிக்கும் ஷமிமா பேகம், கதிஜா சுல்தானா, அமிரா அபாஸி ஆகிய மூன்று சிறுமிகள் லண்டனில் இருந்து இந்த மாதத்தில் சிரியாவுக்கு சென்றுள்ளனர்.
மற்றொரு மாணவி கடந்த டிசம்பர் மாதம் சென்றதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைனில் தீவிரவாதி மணமகன்கள்:
இது மட்டுமின்றி, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்காக மணமகள் தேடும் ஆன் லைன் வலைத்தளங்களில் நூற்றுக்கணக்கான இங்கிலாந்து பெண்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

போட்டி போடும் பெண்கள்:
இதில், குறிப்பிட்ட ஒரு தீவிரவாதியை திருமணம் செய்து கொள்ள மட்டும் உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்துள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் மணம்:
கடந்த ஆண்டு ஜுன் மாதம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த இரட்டை பிறவிகளான சல்மா மற்றும் சாரா ஹலானே ஆகியோர் இதேபோல் தீவிரவாதிகளை திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் சிரியாவுக்கு சென்றனர். தங்களுக்கு பிடித்த, பொருத்தமான துணைவரை திருமணம் செய்தும் கொண்டனர்.

விரும்பி விதவைகளான இரட்டையர்கள்:
குர்தீஷ் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான பன்னாட்டு படைகளின் குண்டு வீச்சில் இவர்களின் கணவர்கள் பலியாகிவிட, தற்போது இந்த இரு பெண்களும் சிரியாவில் விதவைகளாக இருக்கும் அதிர்ச்சி தகவலையும் அந்த செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications