For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜூவில் இருந்து தப்பித்து ஊருக்குள் புகுந்து பெண்ணைத் தாக்கிக் கொன்ற காண்டாமிருகம்... 6 பேர் காயம்!

Google Oneindia Tamil News

காத்மாண்டு: நேபாளத்தில் வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து தப்பித்து ஊருக்குள் புகுந்த காண்டாமிருகம் ஒன்று பெண்ணைத் தாக்கிக் கொன்றது. மேலும், காண்டாமிருகத்தின் தாக்குதலுக்கு ஆளான 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டுள்ளனர்.

நேபாளத்தில் மாத்வான்பூர் மாவட்டத்தில் சுற்றுச்சுவர் இல்லாத திறந்தவெளி வனவிலங்குகள் சரணாலயம் ஒன்று உள்ளது. இங்கிருந்த காண்டாமிருகங்களில் ஒன்று தப்பித்து வெளியேறியது.

Rhino rampages through Nepalese town, leaving one woman dead and six people injured

வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள கிடாயுடா கிராமத்தை அடைந்தது. கிராமத்திற்குள் காண்டாமிருகம் நுழைவதைக் கண்ட மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

காண்டாமிருகத்தை கிராமத்தை விட்டு விரட்ட சிலர் டிரம்ஸ்கள் மற்றும் வாகன ஹாரன்களை இசைத்தனர். இதனால், ஆவேசமடைந்த காண்டாமிருகம் கிராமத்திற்குள் தறிகெட்டு ஓடி, எதிரே வந்தவர்களையெல்லாம் கடுமையாக தாக்கியது.

இதில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

தற்போது, அந்த காண்டாமிருகம் கிடாயுடா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றின் பின்புறத்தில் வனப்பகுதியில் பதுங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த காண்டாமிருகத்தைப் பிடிக்க தொடர்ந்து வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

English summary
A rhinoceros has rampaged through a Nepalese town after wandering off a wildlife reserve, leaving one woman dead and six people injured, police say
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X