திடீரென்று உடைந்து நொறுங்கிய சாலை.. பாதாள சாக்கடைக்குள் விழுந்த 2 பெண்கள்.. அதிர்ச்சி வீடியோ!
துருக்கியில் சாலை ஒன்று திடீர் என்று உடைந்ததில் இரண்டு பெண்கள், பாதாள சாக்கடைக்குள் விழுந்து இருக்கிறார்கள்.
Recommended Video

அன்காரா: துருக்கியில் சாலை ஒன்று திடீர் என்று உடைந்ததில் இரண்டு பெண்கள், பாதாள சாக்கடைக்குள் விழுந்து இருக்கிறார்கள்.
துருக்கியின் டியார்பகிர் நகரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சாலையும், நடைமேடையும் இணையும் பகுதி மொத்தமாக உடைந்து விழுந்துள்ளது.
கீழே ஓடிய சாக்கடையின் குழாயும் உடைந்த காரணத்தால் அங்கு பெரிய பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. அது புதிதாக கட்டப்பட்ட நடைமேடை என்பதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
[ச்சே.. கொள்ளையர்களுக்கே உரிய கெத்தை கெடுத்திட்டீங்களேய்யா.. அப்பிரண்டீஸ்களா!]

இரண்டு பேர்
அந்த பகுதி உடைந்து பெரிய பள்ளம் ஏற்படும் சமயத்தில் அங்கு இரண்டு பெண்கள் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். ஒருவர் பெயர் டாக்டர் சூசன் குடெ பாலிக் என்றும், இனொருவர் பெயர் ஓஸ்லாம் துயாம்ஸ் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நான்கு மணிக்கு இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.
இணையத்தில் வீடியோ
இவர்கள் பேசிக்கொண்டே இருக்கும் போது சாலை அப்படியே உடைந்து உள்ளே சென்றுள்ளது. இது அங்கு இருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இந்த சிசிடிவி பதிவு தற்போது வெளியாகி இருக்கிறது. இது பார்க்கவே அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

மீட்பு பணி
இந்த சாலையும் நடைமேடையும் இணையும் பகுதி உடைந்து சாக்கடைக்குள் சென்றதால், இரண்டு பெண்களும் பூமிக்கு அடியில் சிக்கி இருந்துள்ளனர். இவர்களை மீட்க 4 மணி நேரம் மீட்பு படை வீரர்கள் போராடினார்கள். ஒரு பெண்மணி மட்டும் அதிக ஆழத்தில் சிக்கி இருந்துள்ளார்.

எப்படி இருக்கிறார்கள்
ஆனால் இவர்கள் இருவரும் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காலில் மட்டுமே காயம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு பெரிய விபத்தில் சிக்கி இவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications