Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆப்கன் முன்னாள் துணை அதிபரின் சகோதரரை.. கொடூரமாக சித்ரவதை செய்து கொன்ற தாலிபான்கள்!

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலேவின் சகோதரர் ரோஹுல்லா சலேவை தாலிபான்கள் சித்திரவதை செய்து கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போரை தாலிபான்கள் முடிவுக்கு கொண்டு வந்து விட்டனர். அங்கு தலிபான்கள் இன்று ஆட்சி அதிகாரத்தில் பதவியேற்க உள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள 99 99 சதவீத மாகாணங்களை தாலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.

தாலிபான்களுக்கு தலைவலி

தாலிபான்களுக்கு தலைவலி

ஆனால் ஒரே ஒரு மாகாணம் மட்டும் அவர்களுக்கு குடைச்சல் கொடுத்து வந்தது. அதுதான் பஞ்ச்ஷிர் மாகாணம் இந்த மாகாணத்தில் உள்ள தேசிய கிளர்ச்சி படையினர் தாலிபான்களுக்கு அடிபணியாமல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஒரு சில மாவட்டங்களையும் கைப்பற்றிதால் இவர்களால் தாலிபான்களுக்கு தலைவலி உண்டானது.

 பஞ்ச்ஷிர் மாகாணம்

பஞ்ச்ஷிர் மாகாணம்

இவர்களை இப்படியே விட்டால் சரிவராது என்று நினைத்த தலிபான்கள், தேசிய கிளர்ச்சி படையினருடன் சண்டையிட தொடங்கினார்கள். இந்த மோதலில் இருதரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். முடிவில் பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் தாலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலேவின் சகோதரர் ரோஹுல்லா சலேவை பஞ்ச்ஷிரில் நடந்த மோதல்களின் போது தாலிபான்கள் சித்திரவதை செய்து தூக்கிலிட்டு கொன்றதாக தகவல்கள் கூறுகின்றன.

ரோஹுல்லா சலே

ரோஹுல்லா சலே

வியாழக்கிழமை இரவு நடந்த மோதல்களின் போது ரோஹுல்லா சலே கொல்லப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. 'தாலிபான்கள் நேற்று ரோஹுல்லா சலேவை கொன்றனர். எங்களை அவரது உடலை அடக்கம் செய்ய விடமாட்டார்கள். அவரது உடல் அழுக வேண்டும் என்று தாலிபான்கள் தொடர்ந்து கூறினார்கள்' என்று ரோஹுல்லா சாலேயின் மருமகன் எபதுல்லா கூறியதாக செய்தி நிறுவனம் ஓன்று கூறுகிறது.

Recommended Video

    தாலிபானுக்கு 31 Million Dollars கொடுக்கும் China | Afghanistan Updates | Oneindia Tamil
    தப்பி விட்டனர்

    தப்பி விட்டனர்

    தேசிய கிளர்ச்சி படையின் தலைவரான அஹ்மத் மசூத் மற்றும் அம்ருல்லா சலே தாலிபான்கள் ஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்றிய பின்னர் அங்கு இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் கூறின. அவர்கள் இருவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறவில்லை. தாலிபான்களுடன், அவர்களது எதிர்ப்பு படை சண்டையிட்டு வருகின்றன என்று தஜிகிஸ்தானின் தூதர் தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+