Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆப்கானிஸ்தானுக்கு பைக்கில் போன நபர்.. துப்பாக்கியுடன் வந்த தாலிபான்கள்! இந்தியர் என்றதும் நடந்த ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற இந்திய சுற்றுலாப்பயணி ஒருவரை வழிமறித்த தாலிபான் பாதுகாப்பு படையினர், அவரிடம் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் கேட்டனர். சுற்றுலாவிற்கு வந்த பயணி இந்தியர் என்று தெரிந்ததும், தாலிபான்கள் செய்த காரியம், பலரையும் வியக்க வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள்தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தாலிபான்கள் இந்தியர் என்று தெரிந்ததும் உடனடியாக கொடுத்த ரியாக்‌ஷன் என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கிறது. ஆப்கானில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறிய நிலையில், அந்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கடந்த 2021ஆம் ஆண்டு கைப்பற்றினர். தாலிபான்கள் ஆட்சியில் அடக்குமுறைகள் அதிகம் இருக்கும் என்ற அச்சத்தில், ஆட்சி அமைந்ததும் அந்த நாட்டில் இருந்து மக்கள் ஓட்டம் கூட பிடித்தனர்.

routine-passport-check-by-taliban-in-afghanistan-turns-surprising-for-this-indian-tourist

தாலிபான் ஆட்சி

தாலிபான் அரசு, உலகின் பல்வேறு நாடுகளால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. ஆப்கானிஸ்தானின் தாலிபான் ஆட்சிக்கு இந்தியா சட்டபூர்வமாக இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை. எனினும், கடந்த ஜனவரி மாதம், துபாயில் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் முத்தாக்கி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஈரானிய சாபஹார் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.

இந்திய சுற்றுலாப் பயணி

ஆப்கானிஸ்தானில் இந்தியா ஏற்கனவே பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் நல்லுறவே கடந்த காலங்களிலிருந்து வந்துள்ளது. சரி, அதெல்லாம் இருக்கட்டும். இப்போது விஷயத்திற்கு வருவோம்.. ஆப்கானிஸ்தானுக்கு இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் சென்றதும், அங்கு இருந்த பாதுகாப்புப் படையினர் செய்த காரியம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

புன் சிரிப்புடன் வரவேற்றனர்

இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் தனது பைக்கில் ஆப்கானிஸ்தானில் செல்கிறார். ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய முயன்றதும், தாலிபான் படையினரால் வழக்கம்போல பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக நிறுத்தப்பட்டார். ஆனால், தான் ஓர் இந்தியர் என்று அவர் குறிப்பிட்டதும், பதட்டமான சூழல் தலைகீழாக மாறியது. தாலிபான் வீரர்கள் புன்சிரிப்புடன் அவரை வரவேற்று, பாஸ்போர்ட்டைச் சரிபார்க்காமலேயே செல்ல அனுமதித்தனர்.

இச்சம்பவம் முழுவதும் சுற்றுலாப் பயணி தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். "ஆப்கானிஸ்தான் தனது உண்மையான நண்பர்களை இப்படித்தான் நடத்துகிறது" என்ற தலைப்பில் வெளியான இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

வீடியோ வெளியீடு

அந்த வீடியோவில், ஹெல்மெட்டில் பொருத்தப்பட்ட கேமராவுடன் தனது பைக்கில் பயணிக்கும் இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர், சோதனைச் சாவடி ஒன்றில் துப்பாக்கி ஏந்திய இரண்டு தாலிபான் வீரர்களால் நிறுத்தப்படுகிறார். வழக்கமான பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக அவர்கள் அவரை வழிமறித்தனர்.

அங்கிருந்த வீரர்களில் ஒருவர், அவர் எங்கு செல்கிறார், எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று கேட்டார். அதற்கு சுற்றுலாப் பயணி, தான் காபூலுக்குச் செல்வதாகவும், இந்தியா தான் தனது சொந்த நாடு என்றும் பதிலளித்தார். சுற்றுலாப் பயணி இந்தியர் என்று கேட்டவுடன், அந்த வீரரின் முகத்தில் புன்னகை பூத்தது.

பின்னர், சுற்றுலாப் பயணி தனது பாஸ்போர்ட்டைக் காட்ட முயன்றபோது, அந்த வீரர் "இந்தியா, ஆப்கானிஸ்தான் - சகோதரர். பிரச்சனை இல்லை, பாஸ்போர்ட் இல்லை, சோதனை இல்லை" என்று கூறி அவரைப் போக அனுமதித்தார். இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் @fhzadran என்ற பயனர் பகிர்ந்துள்ளார்.

உண்மையான நண்பர்களை

அந்தப் பதிவில், "ஆப்கானிஸ்தானில் ஒரு இந்திய சுற்றுலாப் பயணியை தாலிபான்கள் சோதனைச் சாவடியில் வழக்கமான பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக நிறுத்தினர். ஆனால் அவர், தான் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று கூறியதும், அவர்கள் புன்னகைத்து அவரை வரவேற்றனர், அவரது ஆவணங்களைச் சரிபார்க்காமலேயே செல்ல அனுமதித்தனர். ஆப்கானிஸ்தான் தனது உண்மையான நண்பர்களை இப்படித்தான் நடத்துகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோவுக்குப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில்,"இது இதயத்தைத் தொடும் தருணம். எதிர்பாராத இடங்களில்கூட மரியாதையும் நட்பும் ஒளிர்கிறது. இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பிணைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது - இது பல தசாப்த கால நல்லெண்ணம், கலாச்சாரம் மற்றும் மனிதநேயத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது. இதயங்கள் நட்பை நினைவில் கொள்ளும் இடத்தில் அன்பும் அமைதியும் எப்போதும் வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு நெட்டிசன் கூறுகையில்,"இது உண்மையான நட்பின் சக்தி. பயம் இல்லை, சந்தேகம் இல்லை - வெறும் மரியாதையும் சகோதரத்துவமும், அரசியலையும் எல்லைகளையும் கடந்தது" என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+