லாட்டரியில் ரூ250 கோடி பரிசு: சொந்தக்காரங்க, தெரிந்தவங்களிடம் இருந்து தப்பிக்க பலே பிளான் போட்ட நபர்!
ஜின்பிங்: லாட்டரியில் பரிசு விழுந்ததை யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக பொம்மை போல வேடமிட்டு பரிசுத்தொகையை சீனாவில் ஒருவர் வாங்கிச்சென்ற சுவாரசிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
திண்ணையில் கிடந்தவருக்கு திடுக்கென யோகம் அடித்தது என்று நமது ஊரில் ஒரு பேச்சு வழக்கு உண்டு.
இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ லாட்டரியில் பரிசு அடிப்பவர்களுக்கு கண்டிப்பாக பொருந்தும்.

லாட்டரியில் பரிசு விழுந்து விட்டால்..
லாட்டரியில் பரிசு விழுந்து விட்டால் பெரும் பணம் மட்டும் அல்ல.. புகழும் கூடவே சேர்ந்து வந்து விடும். பக்கத்து ஊரில் இருப்பவருக்கு கூட தெரியாமல் இருந்த வந்த பலரை, மறுநாளே பட்டிதொட்டியெங்கும் லாட்டரி சீட்டுக்கள் பிரபலப்படுத்திவிடும். இப்படி ஒரே நாளில் பணம் புகழும் இரண்டும் கிடைப்பதால் நேற்று வரை சாமானிய நபராக வலம் வந்த பலரும் திகைத்து விடுவர்.

ரூ.25 கோடி பரிசு வென்ற அனூப்
கேரளாவில் ஓணம் பண்டிகை லாட்டரி பரிசாக ரூ.25 கோடி பரிசு வென்ற அனூப். ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலம் ஆனது அனைவருக்கும் தெரிந்து இருக்கும். பெரிய திரைநட்சத்திரம் போன்ற அவரை பின் தொடர்ந்து செய்தி சேனல்கள் பேட்டி எடுத்து ஒளிபரப்பின. அதேபோல், வீட்டிலும் எப்போதும் கூட்டம் நிரம்பியது. சொந்தக்காரர்கள், தெரிந்தவர்கள் என பலரும் வளைத்து வளைத்து அவருக்கு போன் செய்ததோடும் நேரில் பார்த்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

வீட்டை பூட்டி விட்டு தலைமறைவு
ஆனால், அடுத்த சில நாட்களிலேயே தனது வீட்டை பூட்டி விட்டு அனூப் தலைமறைவானது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட அனூப், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் பணம் கேட்டு நச்சரிப்பதாக புலம்பியிருந்தார். லாட்டரியில் பரிசு அடித்ததால், ஏற்படும் இத்தகைய பிரச்சினைகளை இந்தியா போன்ற நாடுகளில் மட்டும் அல்ல..உலகம் முழுக்க எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கும் போல. ஏனென்றால் இதை மெய்பிக்கும் வகையில்தான் சீனாவில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

ரூ.250 கோடி பரிசு
சீனாவின் குவாங்க்சி மாகாணத்தில் உள்ள நான்னிங் என்ற பகுதியை சேர்ந்த்நவர் லி. அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் கொண்ட இவருக்கு அண்மையில் £26,000,000( இந்திய மதிப்பில் தோராயமாக ரூ 246 கோடி) பரிசு விழுந்துள்ளது. இதனால், மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற லி சந்தோஷத்தில் துள்ளிக்குதித்துள்ளார். எனினும், லாட்டரியில் தனக்கு பரிசு கிடைத்தது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்தால் தேவையற்ற நச்சரிப்புகளையும் தொல்லைகளையும் சந்திக்க நேரிடும் என்று கருதிய லீ...இதற்காக ஒரு சூப்பர் பிளான் போட்டுள்ளார்.

மிக்கி மவுஸ் போன்று பெரிய பொம்மை உடை
இவ்வளவு பெரிய தொகை என்பதால் ஊடகங்களுக்கு தெரியாமல் பரிசுத்தொகையை வாங்க முடியாது. எனவே மிக்கி மவுஸ் போன்று பெரிய பொம்மை உடையை அணிந்த வந்து லீ.. யாருக்கும் தெரியாமல் பரிசுத்தொகையை வாங்கி விட்டு சென்று இருக்கிறார். யாருக்கும் தெரிந்துவிடாமல் இருப்பதற்காக இப்படி ஒரு யோசனையை பின்பற்றி லீ பரிசுத்தொகையை வாங்கிச்சென்றதை பார்த்த அங்குள்ள மக்கள் பலரும்..

உஷார் பார்ட்டிதான் என கருத்து
பரிசுத்தொகை பெற்றவர் செம உஷார் பார்ட்டிதான்.. எப்படியும் பிழைத்துக் கொள்வார் என்று முனுமுனுப்பதை கேட்க முடிந்தது. லாட்டரியில் கிடைத்த பணத்தையும் வீணடிக்காமல் பயனுள்ள வகையில் செலவிட பல திட்டங்களையும் லீ வகுத்து வைத்து விட்டாதாக பரிசுத்தொகையை வழங்கிய பின்னர் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications