ஆக்சிஜனை உறிஞ்சி.. கொத்தாக கொல்லும் "vaccum" பாம்.. இதை வச்சா தாக்குனீங்க? "அப்ரூவர்" ஆன ரஷ்யா!
மாஸ்கோ: உக்ரைனில் vaccum குண்டுகளை வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. உலக நாடுகள் இது தொடர்பாக குற்றஞ்சாட்டி வந்த நிலையில் ரஷ்யா தற்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளது.
ரஷ்யாவின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் பற்றி பார்க்கும் முன் vaccum குண்டுகள் என்னவென்று பார்க்கலாம். இதை thermobaric குண்டுகள் என்றும் கூறுவார்கள்.
பொதுவாக குண்டுகள் பல்வேறு வகைகளில் வெடிக்கும். மருந்து குண்டுகள், ஹைட்ரஜன் குண்டுகள், அணு ஆயுத குண்டுகள் என பல வகைகள் உள்ளன. thermobaric அல்லது vaccum குண்டுகள் என்பவை ஆக்சிஜனை வைத்து வெடிக்கும் குண்டுகள்.

ஆக்சிஜன்
அதாவது இந்த குண்டு ஒரு இடத்தில் போடப்படுகிறது என்றால் சுற்றுப்புறத்தில் இருக்கும் ஆக்சிஜனை பயன்படுத்தி குண்டு வெடிக்கும். தீ பரவ ஆக்சிஜன் தேவை என்பதால் அதை பயன்படுத்தி இந்த குண்டுகள் வெடிக்கும். ஆக்சிஜன் மூலம் இவை வெடிப்பதால் பல மீட்டர் தூரத்திற்கு இந்த குண்டுகள் நெருப்பை கக்கும். மிகப்பெரிய அளவில் நெருப்பு இதனால் பரவும் வாய்ப்புகள் உள்ளன.

தகிக்கும்
இதன் மூலம் பரவும் வெப்பம் அதிக ஆபத்து கொண்டது. ஒரு நொடியில் இந்த குண்டு மூலம் உருவாகும் நெருப்பு பலரை சுட்டு எரிக்கும் ஆற்றல் கொண்டது. இது எப்படி இயங்கும் என்று பார்க்கலாம். முதல் கட்டமாக இந்த குண்டு வெடிக்க வைக்கப்பட்ட உடன் அதில் இருக்கும் கார்பன் வெடி மருந்து வெடித்து கருமேகம் போன்ற சூழ்நிலையை அங்கு ஏற்படுத்தும். இதையடுத்து அந்த குண்டில் இருந்து பரவும் அதிர்ச்சி அலைகள் சில மீட்டர்கள் தூரத்திற்கு பரவி அங்கு உள்ள ஆக்சிஜனை உறிஞ்சி வெற்றிடத்தை உருவாக்கும்.

வெற்றிடம்
இந்த உறிஞ்சப்பட்ட ஆக்சிஜனை அந்த குண்டு அப்படியே நெருப்பாக மாற்றி சேதத்தை ஏற்படுத்தும். சாதாரண குண்டுகள் ஏற்படுத்தும் சேதத்தை விட கடுமையான சேதங்களை இது ஏற்படுத்தும். அதோடு இந்த குண்டுகள் மூலம் ஏற்படும் நெருப்பு நீண்ட தூரத்திற்கு, அதிர்ச்சி அலைகள் நீண்ட நேரத்திற்கும் இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில்தான் ரஷ்யா உக்ரைனில் இந்த வேக்கம் குண்டுகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

ஒப்புக்கொண்டது
இந்த நிலையில் ரஷ்யா தற்போது TOS-1A எனப்படும் வேக்கம் குண்டுகளை பயன்படுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளது. அந்நாட்டு பாதுகாப்புத்துறை இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளது. நாங்கள் இதை உக்ரைனுக்கு எதிரான போரில், உக்ரைன் ராணுவம் மீது பயன்படுத்தி வருகிறோம் என்று அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளது. இதே குண்டுகளை ரஷ்யா சிரியா, ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தடை
அம்னெஸ்டி அமைப்பு, சர்வதேச போர் விதிகளின்படி இந்த குண்டுகள் தடை செய்யப்படவில்லை. ஆனால் இந்த குண்டுகளை ராணுவ அமைப்புகளின் மீது மட்டுமே பயன்படுத்த வேண்டும். மக்கள் இருக்கும் பகுதிகளில் பயன்படுத்த கூடாது. அப்படி செய்தால் அது போர் குற்றம். ரஷ்யா மக்கள் இருக்கும் பகுதிகளில் பல தாக்குதல்களை நடத்தி உள்ளதால், இந்த குண்டுகளையும் மக்கள் இருக்கும் பகுதிகளில் வீசி இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications