Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீக்கப்பட்ட போஸ்ட்கள்.. பேஸ்புக், டிவிட்டருக்கு ரஷ்யாவில் கடும் கட்டுப்பாடு.. நெருக்கடி தரும் புடின்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: டிவிட்டர், பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை ரஷ்யாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அங்கு அதிபர் விளாடிமிர் புடின் இத்தனை நாட்களாக சமூக வலைத்தளங்களை போதிய சுதந்திரம் வழங்கி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகிறார்.

சர்வதேச அளவில் சீனா, வடகொரியா போன்ற நாடுகளில் சமூக வலைத்தளங்களுக்கும், இணையத்தை பயன்படுத்துவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் எல்லாம் நாம் பயன்படுத்தும் பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களே கிடையாது.

கிட்டத்தட்ட சீனாவிற்கு இணையான சர்வாதிகார கொள்கை கொண்ட நாடுதான் ரஷ்யாவும். ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிரான பெரிதாக குரல் கொடுக்க முடியாத சூழ்நிலையே அங்கு நிலவி வந்தது. கடந்த சில வருடங்களாக இணையத்தில் மட்டுமே புடினுக்கு எதிராக அழுத்தமான குரல்கள் வைக்கப்பட்டு வந்தன.

குரல்

குரல்

இணையம் மூலமே புடினுக்கு எதிராக ரஷ்யாவில் கடுமையான போராட்டங்கள் நடந்தன. தனக்கு எதிராக ஒரு வார்த்தை கூட செய்திகளில் வெளியாகாமல் கட்டுப்படுத்தி வந்த புடினால் இணையத்தில் வேகமாக பரவிய எதிர்ப்புகளை கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த சில மாதங்களாக ரஷ்யாவில் அரசுக்கு எதிராக நடக்கும் பல கட்ட போராட்டங்களுக்கு டிவிட்டர், பேஸ்புக்தான் காரணம்.

அலெக்சி நாவல்னி

அலெக்சி நாவல்னி

ரஷ்யாவின் புடினுக்கு எதிரான தலைவராக கருதப்படும், எதிர்க்கட்சிகளின் முகமாக கருதப்படும் அலெக்சி நாவல்னி வளர்ச்சி அடைந்ததும் முழுக்க முழுக்க இணையத்தை வைத்துதான். இவரின் போராட்ட வீடியோக்கள்தான் ரஷ்யாவில் புடினுக்கு எதிரான பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் : அங்கு அதிபர் விளாடிமிர் புடின் இத்தனை நாட்களாக சமூக வலைத்தளங்களை போதிய சுதந்திரம் வழங்கி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகிறார்.

டிவிட்டர்

டிவிட்டர்

டிவிட்டர், பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை ரஷ்யாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அங்கு சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான நடவடிக்கைகள் பல கடந்த சில தினங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் அரசுக்கு எதிராக வரும் போஸ்ட்களை நீக்க வேண்டும் என்று ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

கூகுள்

கூகுள்

கூகுளில் உள்ள கட்டுரைகள் பலவற்றை நீக்க வேண்டும் என்றும் ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ரஷ்ய அரசு கோரிக்கை வைத்த கட்டுரைகளை நீக்கவில்லை என்று கூகுள் நிறுவனத்தின் வேகம் ரஷ்யாவில் மொத்தமாக குறைக்கப்பட்டுள்ளது. அரசுக்கு கட்டுப்படவில்லை என்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கூகுள் கட்டுரை ஒன்றை நீக்கவில்லை என்று அந்நாட்டு நீதிமன்றம் மூலம் 81 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 அபராதம்

அபராதம்

அதேபோல் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் உள்ள ரஷ்யர்களின் டேட்டாக்களை ரஷ்யாவில்தான் சேமிக்க வேண்டும். வெளிநாடுகளில் சேமிக்க கூடாது. ஜூலைக்குள் இந்த விதியை பின்பற்றவில்லை என்றால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று ரஷ்ய அரசு கூறியுள்ளது. அதோடு அரசு குறிப்பிட்ட சில போஸ்ட்களை நீக்கவில்லை என்று டிவிட்டர் செயல்பாட்டை சில நாட்கள் ரஷ்ய அரசு முடிகிறது. போஸ்ட்கள் போடுவதிலும், மெசேஜ் அனுப்புவதில் மக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளானார்.

நீக்கம்

நீக்கம்

ரஷ்ய அரசின் கோரிக்கையை ஏற்று 6000க்கும் அதிகமான போஸ்ட்களை நீக்கி இருந்தாலும் கூட டிவிட்டர் மீது ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல் பேஸ்புக்கில் அரசுக்கு எதிராக போராட்ட வீடியோக்களை பதிவு செய்த பலரின் கணக்குகளை நீக்க வேண்டும் என்று ரஷ்ய அரசு கோரிக்கை வைத்தது. இதையடுத்து பேஸ்புக்கிலும் பல்வேறு கணக்குகள் நீக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    மத்திய அரசின் புது ஐடி விதி.. குழப்பத்தில் மக்கள்.. இனி என்ன நடக்கும்?
    டிக்டாக்

    டிக்டாக்

    அதேபோல் டிக்டாக்கில் ரஷ்ய அரசுக்கு எதிராக பரவிய வீடியோவை அந்த நிறுவனம் நீக்க மறுத்தது என்பதால் அந்த நிறுவனத்திற்கு 35000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. இனிமேலும் டிவிட்டர், பேஸ்புக்,டிக்டாக் போன்ற நிறுவனங்கள் இதே தவறுகளை செய்தால் நிறுவனத்தின் வருமானத்தில் 10%த்தை அபராதமாக எடுப்போம் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

    சீனா

    சீனா

    இத்தனை நாட்கள் ரஷ்யாவில் இருந்த குறைந்தபட்ச இணைய சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக தடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் புதிய ஐடி விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் ரஷ்யாவிலும் இணையத்திற்கு கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஐடி விதிகள் கருத்து உரிமைக்கு எதிராக இருப்பதாக பலர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    வாட்ஸ் ஆப் நிறுவனம் இதற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது. அதே போல் டிவிட்டர் நிறுவனம் இந்த புதிய விதிகளை தனி மனித உரிமைக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது. இந்தியாவில் மத்திய தகவல்கள் தொழில்நுட்ப துறை மூலம் சமூக வலைத்தளங்களுக்கும், ஓடிடி தளங்களுக்கும் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டன. கடந்த 26ம் தேதி இந்த விதிகள் முழுமையாக அமலுக்கு வந்தன. பேஸ்புக், கூகுள் மட்டுமே இந்த விதிகளை தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+