ரஷ்யாவில் வாட்ஸ்அப்-க்கு தடை.. டெலிகிராமுக்கும் ஸ்கெட்ச்! புதினின் முக்கிய மூவ்! என்ன நடக்குது?
மாஸ்கோ: இந்தியாவில் சீனா ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டது போல, ரஷ்யாவில் தற்போது வாட்ஸ்அப்-க்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட டெலிகிராம் செயலிக்கும் புடின் அரசு தடை விதித்திருக்கிறது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை குறித்து வாட்ஸ்அப் கவலை தெரிவித்தது. இது 10 கோடிக்கும் அதிகமான யூசர்களை தனிமைப்படுத்தும் என கூறியது. மேலும், மக்களுக்கான பாதுகாப்பைக் குறைக்கும் என்றும் வாட்ஸ்அப் குறிப்பிட்டது.

"ரஷ்ய அரசு, மக்களை அரசுக்குச் சொந்தமான கண்காணிப்பு செயலிக்குத் திசை திருப்பும் முயற்சியாக வாட்ஸ்அப்பைத் தடுக்க முயல்வது, பாதுகாப்பான தகவல்களிலிருந்து மக்களைப் பிரிக்கும் பிற்போக்குச் செயலாகும். யூசர்களை தொடர்ந்து இணைப்பில் வைத்திருக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்" என்று வாட்ஸ்அப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
டெலிகிராம் நிறுவனர் பவெல் துரோவ், ரஷ்யாவின் இம்முயற்சியை கடுமையாக விமர்சித்தார். அவர் இதை சர்வாதிகாரம் என்று சாடினார். தனது தளத்தின் உறுதியான நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார். இச்செயல் ஒரு வலுவான எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
"ரஷ்யா டெலிகிராமை கட்டுப்படுத்துவது, அதன் குடிமக்களைக் கண்காணிப்பு மற்றும் அரசியல் தணிக்கைக்கான அரசு கட்டுப்படுத்தப்பட்ட செயலிக்குத் தள்ளவே. இந்த நகர்வு எங்கள் பாதையை மாற்றாது; எந்த அழுத்தத்திலும் டெலிகிராம் சுதந்திரம், தனியுரிமைக்காகவே நிலைத்து நிற்கும்" என பவெல் துரோவ் அழுத்தமாகக் கூறினார்.
ரஷ்யாவுக்கும், வெளிநாட்டு அப்ளிகேஷன்களுக்கும் இடையில் அடிக்கடி பஞ்சாயத்துகள் எழும். ஆனால், உக்ரைன் போரை தொடர்ந்து இந்த பஞ்சாயத்துகள் அதிகரித்திருக்கின்றன. இப்படி இருக்கையில், தற்போது வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராமுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மாற்றாக MAX எனும் அப்ளிகேஷனை அந்நாட்டு அரசு கொண்டு வந்திருக்கிறது. இதில், சாட் வசதி மட்டுமல்லாத அரசு ஆவணங்களை சேமித்து வைக்கும் அம்சமும் இடம் பெற்றிருக்கிறது.
ஆனால், இது மக்களை கண்காணிப்பதற்காக கொண்டுவரப்பட்ட செயலி என்று பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர். இருப்பினும் ரஷ்ய அரசு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.
-
இஸ்ரேலை நம்பாத இந்தியா! ஆயுத கொள்முதலில்.. ரஷ்யாவுடன் சைலண்டாக டீல் முடிந்தது! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
இந்தியாவுக்கு அனுமதி கொடுக்க அமெரிக்கா யாரு..மானத்தை காப்பாத்துங்க மோடி..ரஷ்யா விவகாரத்தில் ஸ்டாலின் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு












Click it and Unblock the Notifications