அவ்வளவு ஈஸி இல்லை! விக்கித்து போன புடின்! ஸ்மார்ட் கேம் ஆடும் உக்ரைன் அதிபர்! பரபர உளவுத்துறை REPORT
மாஸ்கோ: உக்ரைனுக்கு உள்ளே ரஷ்யா படைகள் புகுந்து உள்ள நிலையில் கடந்த 5 நாட்களாக உக்ரைன் தலைநகர் கீவை பிடிக்க முடியாமல் ரஷ்ய படைகள் திணறி வருகின்றன. இது தொடர்பாக முக்கியமான உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்றும் வெளியாகி உள்ளது.
Recommended Video
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உக்ரைன் மீது அனைத்து பக்கங்களில் இருந்தும் தாக்குதல் நடத்த போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையிலான முதல் மூன்று சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்னும் 2 நாட்களில் நடக்கும்.
உக்ரைனின் கிழக்கு பகுதியை சுதந்திர பகுதியாக அறிவிக்க ரஷ்யா முயன்று வருகிறது. இதனால் கிழக்கு பகுதியை குறி வைத்து ரஷ்யா தனது படைகளை நகர்த்தி வருகிறது.

உக்ரைன் ரஷ்யா
உக்ரைன் உள்ளே 80 சதவிகித ரஷ்ய படைகள் நுழைந்துவிட்டன. இதில் கிட்டத்தட்ட 60 சதவிகித ரஷ்ய படைகள் இப்போது கீவ் எல்லையில்தான் இருக்கின்றன. ஆனால் கீவ் எல்லை உள்ளே நுழைந்ததும் ரஷ்யா படைகள் எதிர்பார்க்காத ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. இந்த அளவிற்கு உக்ரைன் படைகள் அங்கே இருக்கும். அவர்களிடம் இவ்வளவு ஆயுதங்கள் இருக்கும், ஏவுகணைகள், விமானங்கள் இருக்கும் என்று புடின் நினைக்கவில்லை.

ரஷ்யா ஏமாற்றம்
இதனால் ரஷ்ய படை கீவ் எல்லைக்கு வந்ததும் பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளானதாக யு.கே உளவுத்துறை ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. அந்நாட்டு ராணுவம் பொதுவில் வெளியிட்டுள்ள ரிப்போர்ட்டில் உக்ரைனில் இருக்கும் படைகள் பற்றி ரஷ்யா தப்பு கணக்கு போட்டுவிட்டது. இதனால் கீவை பிடிப்பதை பற்றிய திட்டத்தில் அவர்கள் சொதப்பிவிட்டனர். கடந்த 4 நாட்களாக கீவை பிடிக்க முடியாமல் ரஷ்யா திணறி வருகிறது. அதிலும் உக்ரைன் தலைநகரில் கடந்த 24 மணி நேரத்தில் மிக மிக குறைந்த அளவில் மட்டுமே ரஷ்யா முன்னேறி உள்ளது.

புடின் ஏமாற்றம்
புடின் இதனால் ஏமாற்றம் அடைந்துவிட்டதாக அந்த ரிப்போர்ட் கூறுகிறது. இதனால் ரஷ்ய படைகள் கூடுதல் ஆயுதங்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கார்கிவ் பகுதியில் ரஷ்யா அதிக அளவில் குண்டுகளை போட்டதற்கு காரணம் இந்த சறுக்கல்தான். இடமாற்றம், எப்படி செல்வது, உக்ரைன் படைகளை எப்படி எதிர்கொள்வது, போதிய குண்டுகள் இல்லாதது போன்ற காரணங்களால் ரஷ்யா கீவ் எல்லையில் பின் தங்கி உள்ளது.

வரிசையாக நிற்கிறது
சாட்டிலைட் படங்கள் படி பார்த்தால் உக்ரைன் தலைநகர் வெளியே 64 கிமீ தொலைவிற்கு பீரங்கிகள் ரஷ்யா மூலம் நிறுத்தப்பட்டுள்ளது. தலைநகர் உள்ளே செல்ல முடியாமல் இப்படி வெளியே படைகளை நிறுத்தி உள்ளனர். இதற்கு முன் 27 கிமீ தூரமாக இருந்த லைன் தற்போது 64 கிமீ தூரமாக மாறியுள்ளது. இதன் அர்த்தம் படைகளால் முன்னேற முடியாமல் வெளியே லைனில் நிற்க வேண்டியதாகிவிட்டது என்பதுதான் என்று யு.கே உளவுத்துறை ரிப்போர்ட் கூறியுள்ளது.

வான் பகுதி
அதோடு உக்ரைனில் கீவ் வான்பகுதியை ரஷ்யா இன்னும் கைப்பற்ற முடியவில்லை. கீழே உக்ரைன் ஏவுகணைகள் இருப்பதால் அதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பின்பே வான்பகுதியை கைப்பற்ற முடியும். இதனால் ரஷ்யா இங்கும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இதனால் வேறு வழியில்லாமல் ரஷ்யா இரவு நேர தாக்குதல் ஆபரேஷனை உக்ரைனில் செய்து வருவதாக யுகே தனது ரிப்போர்ட்டில் தெரிவித்துள்ளது.

போன்கள் தடை
மேலும் உக்ரைனில் இணையம் கட் செய்யப்பட்டு, உக்ரேன் மக்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் ஸ்டார்லிங்க் இணையம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரஷ்யா போன்கள், சிம்கள் தடை செய்யப்பட்டுள்ளது. ஜாமர்கள் மூலம் பல இடங்களில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யா இங்கே கடுமையாக திணறி வருகிறது. உக்ரைன் இந்த போரில் ஸ்மார்ட் கேம் ஆடி வருகிறது என்று கூறப்படுகிறது. தெருக்களின் பெயர்கள் கூட நீக்கப்பட்டுள்ளதால் ரஷ்யா எங்கே செல்வது என்று தெரியாமல் நிலைகுலைந்து போய் இருப்பதாக இந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.

உளவு ரிப்போர்ட் என்ன சொல்கிறது
இந்த போரில் இதுவரை உக்ரைனுக்கு 32க்கும் அதிகமான நாடுகள் ஆதரவு அளித்து உள்ளன. இதனால் ரஷ்யா நினைத்ததை விட போர் மோசமாகி உள்ளது. உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக உக்ரைனை சமாளிக்க முடியாமல் இந்த நிமிடம் ரஷ்யா திணறி வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பின்லாந்து, அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் ஆயுதம் வழங்குவதால் உக்ரைன் கை இதில் ஓங்க தொடங்கி உள்ளது என்று யு.கே உளவுத்துறை ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.
-
ரூ.160 லட்சம் கோடி.. உலகப் பொருளாதாரத்தின் 'இதயத் துடிப்பை' நிறுத்திய ஈரான்.. அராம்கோ மீதே அட்டாக்! -
கடைசியில் ஒரு வழியா வருது.. சென்னை லூலூ மால்.. தொடங்குது கட்டுமானம்.. எங்கே வருது தெரியுமா? -
ஈரான் எதிர்பாராத அட்டாக்.. பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெரிய கேஸ் ஆலைகள் மூடல்! உலகிற்கே பாதிப்பு -
ராகுலுக்கு செக்.. செங்கோட்டையை நோக்கி ‘சூரியன்’.. ஸ்டாலினின் 3வது அணி ரெடி.. உடையும் இந்தியா கூட்டணி -
வேற யாராவதுன்னா ஜெயில்தான்.. விஜய்யை கட்டிப்போட்ட அந்த 25 பேஜ்.. அதிர்ச்சி தரும் 4 முக்கிய புகார்கள்! -
வாயை கூட திறக்காத சீனா.. ஈரான் விவகாரத்தில் ட்விஸ்ட் கொடுக்கும் ஜின்பிங்.. என்ன மேட்டர் தெரியுமா? -
99% எல்லாம் ஓவர்.. 24 மணி நேரம்தான் டைம்.. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் டெட் லைன்.. காங்கிரஸ் ஷாக் -
இஸ்ரேலை நோக்கி.. செஜில் வகை ஏவுகணைகளை வீச தொடங்கியது ஈரான்! ரொம்ப கஷ்டம்! -
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்! -
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
ஈரான் தாக்குதலில் தப்பிய இஸ்ரேல் பிரதமர்.. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து பேட்டி!












Click it and Unblock the Notifications