உலுக்கும் வைரஸ்.. ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,252 பேர் பலி.. கதறும் ரஷ்யா.. விறுவிறு நடவடிக்கை
ரஷ்யாவில் கொரோனா தொற்று வைரஸ் அதிகமாகி கொண்டே வருகிறது
மாஸ்கோ: ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா மரணங்கள் அதிகரித்து வருவதாக ரஷ்ய டாக்டர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்து வந்தநிலையில், இன்றைய தினம் கொரோனா பாதிப்புகளும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் இந்தியாவும், 3வது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
இதில் ரஷ்யா 5வது இடத்தில் உள்ளது.. தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகமாகி கொண்டே வருகின்றன.. எனவே, அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது..

மக்கள்
அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வேறு எதற்காகவும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும், அதேசமயம், ஊதியத்துடன் கூடிய விடுப்பும் தரப்படுவதாக அந்நாட்டு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. அதேசமயம், தடுப்பூசிகளை நாட்டு மக்களுக்கு செலுத்தும் பணியும் துரிதமாகி வருகிறது.. ஒரே நாளில் 40 ஆயிரம், 50 ஆயிரம் பேர் தொற்றுக்கு ஆளாகி வருவது அந்நாட்டு மக்களை கவலைக்குள்ளாக்கி வருகிறது.

கவலை
சில தினங்களுக்கு முன்பு, ஆக்சிஜன் தட்டுப்பாடும் அதிகரித்து வருவதாக அந்நாட்டு டாக்டர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.. கொரோனா மரணங்கள் சமீப நாட்களாக அதிகரித்து வந்தாலும், அதன் உண்மையான தரவுகள் வெளியிடப்படுவதில்லை என்றும், அப்படியே அரசு வெளியிட்டாலும், அதில் வெளியிடும் எண்ணிக்கையைவிட, கொரோனா மரணங்கள் மேலும் அதிகமாகவே ஏற்படுகின்றன என்றும் ரஷ்ய டாக்டர்கள் பகீர் தகவலை வெளியிட்டிருந்தனர்.

ரஷ்யா
அதுமட்டுமல்ல, ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் ஏற்படும் மரணங்கள் அதிகம் என்றும், ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு, மயக்க மருந்து பற்றாக்குறை போன்றவையும் அதிக உயிரிழப்புக்கு காரணமாக அமைந்து வருவதாகவும் தெரிவித்திருந்த நிலையில், இதனால் நாடு முழுவதும் மக்கள் அதிர்ந்து போனார்கள்.. அதிலும் ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாகவே தொற்றின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது.. கடந்த 24 மணி நேரத்தில் 36,970 கொரோனா கேஸ்கள் புதிதாக பதிவாகி உள்ளன.. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது.

சுகாதாரத்துறை
கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1,252 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2.64 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது... தற்போது தொற்றில் இருந்து 80 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.. இன்னும் 10.42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. தீவிர முன்னெடுப்பை கையில் எடுத்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications