Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?

Subscribe to Oneindia Tamil

தெர்ஹான்: அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் இதுவரை இல்லாத வகையில் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை மற்ற நாடுகள் தலையிடவில்லை என்றாலும் கூட ரஷ்யாவின் உளவுத்துறை தகவல்கள் இதில் முக்கிய பங்காற்றி இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

மத்திய கிழக்கு மோதல்கள் விண்வெளி தகவல்களால் முடிவாகும் நிலைக்குப் போய்விட்டது. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் இது தொடர்பாக சில முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்கப் போர்க்கப்பல்கள், விமானங்களின் துல்லியமான இருப்பிடங்கள் உட்பட முக்கியமான உளவுத் தகவல்களை ரஷ்யா தான் ஈரானுக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Russia Intel to Iran Satellite data is Guiding Strikes on US Bases Amid Middle East tension

ரஷ்யா

போர் என்பது இந்த காலத்தில் மொத்தமாக மாறிவிட்டதையே இது காட்டுகிறது. வெறுமன தாக்குதல்களைத் தாண்டி, உளவுத் தகவல்கள் எப்படிச் சேகரிக்கப்படுகிறது என்பதே போரில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த நவீனப் போரில் செயற்கைக்கோள் உளவு டேட்டா முக்கிய பங்காற்றுகிறது. இந்த டேட்டாவை வைத்தே அமெரிக்காவை அதிர வைத்துள்ளது ஈரான்!

ரஷ்யா இந்த மோதலில் இதுவரை நேரடியாக ஈடுபடவில்லை. போர் ஆரம்பித்தது முதலே ஈரானுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவுக்கு எதிராகவும் ரஷ்யா கருத்து கூறியது. இருந்தாலும், இந்த போரில் ரஷ்யா நேரடியாக வரவில்லை. இருந்த போதிலும் ஈரானுக்கு உதவும் வகையில் சாட்டிலைட் உளவுத் தகவல்களைச் சொல்லி இருக்கிறது. இதுவே ஈரானுக்கு கேம் சேஞ்சர் ஆயுதமாக மாறியுள்ளது.

சாட்டிலைட் டேட்டா

ரஷ்யா தனது செயற்கைக்கோள் மூலம் சேகரித்த உளவுத் தகவல்களை ஈரானுக்குப் பகிர்வதாக சொல்லப்படுகிறது. அமெரிக்கப் படைகள், கப்பல்கள், விமானங்களின் நகர்வுகள் குறித்த டேட்டாக்களை ஈரானுக்கு ரஷ்யா வழங்குவதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. ரஷ்யா இந்த தகவல்களை மறுத்தாலும் கூட, உளவுத் துறை தகவல்களை இரு நாடுகளும் பகிர வாய்ப்பு மிக மிக அதிகம் என்றே சர்வதேச வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே ரஷ்யா- ஈரான் பாதுகாப்பு உறவுகள் வலுத்துள்ளன. உக்ரைன் போர் சமயத்திலேயே ரஷ்யாவுக்கு உதவும் வகையில் டிரோன்கள், ஏவுகணைகளை ஈரான் விநியோகித்தது ஓர் எடுத்துக்காட்டு. அந்த ஏவுகணைகள் தான் இப்போது அமெரிக்காவுக்குத் தலைவலியாக மாறியிருக்கிறது என்பது தனிக்கதை!இந்த பார்ட்னர்ஷிப்பை நீட்சியாகவே உளவுத் தகவல் பரிமாற்றம் பார்க்கப்படுகிறது.

துல்லிய தாக்குதல்

ரஷ்யாவின் உளவுத் தகவல்களை வைத்து ஈரான் நடத்திய தாக்குதல்கள் கவலையை எழுப்பியுள்ளன. குவைத்தில் அமெரிக்கப் படைகள் தங்கியிருந்த தளத்தின் மீது ஈரான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின. இதில் ஆறு வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு நேரடித் தொடர்பில்லை என்றாலும் ஈரானால் எப்படி இந்தளவுக்குத் துல்லியமாகத் தாக்குதல் நடத்த முடியும் என்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த இடத்தில் தான் ரஷ்யாவின் உளவுத் தகவல்கள் உதவி இருக்குமோ என அஞ்சப்படுகிறது.

மோதல்

இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் மோதலை பொறுத்தவரை அது கடந்த பிப்ரவரி 28ம் தேதி தொடங்கியது. முதல் நாள் தாக்குதலிலேயே ஈரானின் சுப்ரீம் லீடர் கமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து போர் சீக்கிரமே முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு முழுக்க இயல்பு நிலை பாதிக்கப்பட்டு, பதற்றம் அதிகரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+