"கில் லிஸ்ட்" தயாராகிடுச்சு.. ஜாக்கிரதை! புடினின் மிகப்பெரிய திட்டம்.. பரபரப்பை கிளப்பும் அமெரிக்கா!
மாஸ்கோ: ரஷ்யா கில் லிஸ்ட் என்ற பெரு பட்டியலை தயார் செய்து வைத்து இருப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. இந்த பட்டியல் குறித்து பல்வேறு புகார்களை அமெரிக்கா தெரிவித்து வருகிறது.
உக்ரைனில் ரஷ்யா தீவிரமாக நுழைந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று காலை தாக்குதல் தொடங்கிய நிலையில் இன்று மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
உக்ரைனை கடல், வானம், தரை என்று மூன்று பக்கத்திலும் இருந்தும் தாக்கி வருகிறது. இதே வேகத்தில், வெளிநாடுகளில் உதவி இன்றி போர் நடந்தால் சில வாரங்களில் ரஷ்யா மொத்தமாக உக்ரைனை ஆக்கிரமிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

என்ன நடந்தது?
பொதுவாக ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது போர் தொடுக்கிறது என்றால் அந்த நாட்டில் இருக்கும் தலைவர்களை போர் தொடுக்கும் நாடு சிறை பிடிக்கும். அவர்களுக்கு பல்வேறு தண்டனைகளை கொடுக்கும். நாடு கடத்துவது, தூக்கு தண்டனை கொடுப்பது உள்ளிட்ட தண்டனைகளை கொடுக்கும். இந்த நிலையில்தான் ரஷ்யா இதேபோல் உக்ரைனில் இருக்கும் தலைவர்களை தண்டிக்க முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்து வருவதாக அமெரிக்க குற்றஞ்சாட்டி உள்ளது. ரஷ்யாவின் உளவு அமைப்பான எப்எஸ்பி அமைப்புதான் இதில் ஈடுபட்டு வருவதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.

உளவு அமைப்பு
சோவியத் உடைந்த பின் கேஜிபி உளவு அமைப்பு எப்எஸ்பி உளவு அமைப்பாக ரஷ்யாவில் உருமாறியது. இந்த நிலையில் எப்எஸ்பி உளவு அமைப்பு ரஷ்யாவிற்கு உள்ளே பணிகளை செய்வதாக கூறப்பட்டாலும் உலகம் முழுக்க இது உளவு பணிகளை செய்து வருகிறது. இந்த அமைப்பு கொடுத்த லிஸ்ட் மூலம் உக்ரைனில் இருக்கும் அரசியல் தலைவர்களின் பெயர்கள் அடங்கிய கில் லிஸ்ட் ஒன்றை ரஷ்யா உருவாக்கி உள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.

கில் லிஸ்ட்
கில் லிஸ்ட் என்றால் கொலை பட்டியல். உக்ரைனில் இருக்கும் அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் பட்டியல் இது. போர் நடக்கும் சமயத்தில் உக்ரைனில் ஆட்சியை கவிழ்த்து ரஷ்யாவிற்கு கீழ் கொண்டு வர எப்எஸ்பி முயலும். இதற்கான எப்எஸ்பி உளவாளிகள் ஏற்கனவே உக்ரைனில் ரஷ்யா மூலம் களமிறக்கப்பட்டு உள்ளனர். ஆட்சியை கவிழ்த்து உக்ரைனை ரஷ்யாவிற்கு கீழ் கொண்டு செல்ல தடையாக இருக்கும் நபர்களை காலி செய்வதற்காக இந்த எப்எஸ்பி அமைப்பு உக்ரைனில் களமிறங்கி உள்ளதாம்.

பெரிய பிளான்
இதற்காக உருவாக்கப்பட்ட லிஸ்ட்தான் கில் லிஸ்ட். ரஷ்யாவின் வருகையை ஏற்றுக்கொள்ளாத நபர்களை எப்எஸ்பி தண்டிக்க போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனில் உள்ள எதிர்ப்பை கட்டுப்படுத்தி, கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் விதமாக எப்எஸ்பி காய்களை நகர்த்தி வருகிறதாம். அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி அங்கு உள்ள கோடீஸ்வரர்களையும் ரஷ்யாவிற்கு அடிபணியுங்கள், இல்லையென்றால் மரணம்தான் என்று எப்எஸ்பி மிரட்டி வருகிறதாம்.
Recommended Video

ரஷ்யா மறுப்பு
ஐநாவிற்கான அமெரிக்க தூதரே ஹென்ஸ்லி அனுப்பிய கடிதத்தில்தான் இந்த கில் லிஸ்ட் குறித்த புகாரை அமெரிக்கா வெளிப்படையாக வைத்துள்ளது. செய்தியாளர்கள், ரஷ்யாவை எதிர்க்கும் அரசியல் தலைகள், சில கோடீஸ்வரர்கள், எல்ஜிபிடி பிரிவினர், சில குறிப்பிட்ட மத பிரிவினர் ஆகியோரும் இந்த லிஸ்டில் உள்ளனர் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. ஆனால் அமெரிக்கன் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. கில் லிஸ்ட் எதுவும் இல்லை இது கட்டுக்கதை என்று ரஷ்யா கூறியுள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications