ரஷ்யா பாய்ச்சல்! முதல் அட்டாக்கே உக்ரைன் ராணுவ தலைமையகத்தில்.. கொத்து கொத்தாக வந்த ராட்சச ஏவுகணைகள்!
மாஸ்கோ: ரஷ்யா உக்ரைனில் போர் தொடுத்துள்ள நிலையில் நேரடியாக முதல் அட்டாக்கே உக்ரைன் ராணுவ தலைமையத்தில் நடத்தப்பட்டுள்ளது. அதாவது எந்த இடத்தில் தாக்கினால் ஒரு நாட்டின் ராணுவம் பாதிக்கப்படுமா சரியாக அந்த இடத்தில் ரஷ்யா தாக்குதலை தொடங்கி உள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் உச்சத்தை தொட்டுள்ளது. உக்ரைன் இன்னும் பதில் தாக்குதல் நடத்தாத நிலையில் ரஷ்யா வேகமாக உக்ரைனுக்கு உள்ளே புகுந்து சரமாரி தாக்குதல் நடத்தி உள்ளது. உக்ரனுக்கு உள்ளே ரஷ்யா வேகமாக முன்னேறி வருகிறது.
உக்ரைன் மீது போர் தொடுக்கும்படி இன்று காலை ரஷ்ய அதிபர் புடின் அறிவித்தார். உக்ரைனுக்கு உள்ளே புகுந்து militari operation நடத்தும்படி ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டு இருக்கிறார்.

எங்கே தாக்குதல்
முதல் கட்டமாக கிழக்கு உக்ரைன் பகுதியை அதாவது கிரிமியா பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்து வருகிறது. கிரிமியாவை ரஷ்யா ஏற்கனவே தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது. உக்ரைனின் ஆளுகைக்கு உட்படாத பகுதியாக கிரிமியாவை ரஷ்யா அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் கிழக்கு உக்ரைனை ரஷ்யா தாக்கி உள்ளது. அங்கு உக்ரைன் அரசுக்கு எதிராக புரட்சி படைகள் செயல்பட்டு வருகின்றன.

புரட்சி படைகள்
இந்த புரட்சி படைகளுக்கு ஏற்கனவே ரஷ்யா ஏவுகனைகள், ஆயுதங்களை வழங்கியது. இந்த நிலையில்தான் அந்த பகுதியில் இருந்து ரஷ்யா ஏவுகணைகளை ஏவி வருகிறது. ரஷ்யாவிடம் இருக்கும் ஒரே நேரத்தில் அதிக ஏவுகணைகளை ஏவும் மல்டி ஏவுகணை சிஸ்டம் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் பல நூறு கணக்கில் ஏவுகணைகளை இதன் மூலம் செலுத்த முடியும். இதுவரை சிறிய அளவிலான ஏவுகணைகள் மட்டுமே ஏவப்பட்டு உள்ளன.

எங்கே தாக்குதல்
முக்கியமாக உக்ரைனின் ராணுவ அமைச்சகம் இருக்கும் பகுதியில் ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. உக்ரைனின் மிலிட்டரி அமைச்சகம், அவர்களின் விமான, ராக்கெட் ஏவுதளம், ராணுவ தளங்கள் இருக்கும் பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. தலைநகர் கையிவ், முக்கிய நகரங்களான கர்க்கிவ், டின்ப்ரோ ஆகிய பகுதிகளில் இந்த தாக்குதல்கள் நடந்து வருகின்றன. ராணுவ ரீதியாக உக்ரைன் வலிமையாக இருக்கும் பகுதிகளை முதலில் ரஷ்யா தாக்கி உள்ளது.

ஏவுகணைகள்
இங்கு ஏவுகணைகள் பறந்து வந்து தாக்கும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் போர் விமானங்களும் உள்ளே புகுந்து குண்டுகளை போட தொடங்கி உள்ளன. கையிவ், முக்கிய நகரங்களான கர்க்கிவ், டின்ப்ரோ ஆகிய பகுதிகளில் போர் விமானங்கள் புகுந்து தாக்கி வருகின்றன. இது மட்டுமின்றி தரை வழியாக கிழக்கு உக்ரைனுக்கு உள்ளே 1 லட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய படைகள் நுழைந்து உள்ளன. அவர்கள் துப்பாக்கி மூலம் தாக்கி வருகிறார்கள்.
Recommended Video

சரண்டர் ஆகுங்கள்
இந்த போர் இப்போதுதான் தொடங்கி உள்ளது என்றாலும் ரஷ்யா வேகமாக முன்னேறி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் படைகளிடம் உக்ரைன் சரண் அடைய வேண்டும் என்று புடின் கூறியுள்ளார். உங்கள் நாட்டில் சேதங்களை தவிருங்கள். இது பெரிய போராக மாற கூடாது. மக்கள் பலியாக கூடாது. எங்களிடம் சரண் அடையுங்கள் என்று ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் நாட்டு ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications