நிபந்தனையில்லா போர் நிறுத்தம்.. உக்ரைன் கோரிக்கையினை நிராகரித்த ரஷ்யா
கீவ்: துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இன்று நடந்த பேச்சுவார்த்தையில், நிபந்தனை இல்லாத முழுமையான போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா முன்வர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்த நிலையில் இந்த கோரிக்கையை ரஷ்யா நிராகரித்துள்ளது. மூன்று ஆண்டுகளாக போர் தொடர்ந்து வரும் நிலையில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ரஷ்யாவுக்குள் உக்ரைன் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.
கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் - ரஷ்யா இடையே போர் மூண்டது. நேட்டோவில் இணையக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா இந்த போரை தொடுத்த நிலையில் 3 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் போர் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் சிறிய நாடு தானே என்று நினைத்த ரஷ்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது.

இரு நாடுகளுக்கும் தொடர்ந்து நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் நிபந்தனைகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இந்த போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இதுவரை இல்லாத அளவாக மிகப்பெரிய தாக்குதலை ரஷ்யா மீது உக்ரைன் நடத்தியுள்ளது.
ரஷ்யாவுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் விமானப்படைக்கு சொந்தமான 40 போர் விமானங்கள் தகர்க்கபட்டதாக கூறப்பட்டது. உக்ரைனில் இருந்து சுமார் 4,300 கிமீ தூரம் உள்ள ரஷ்யாவின் இர்குட்ஸ் ஒப்லாஸ்டின்பேலயா மீது இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் ரஷ்யா மிகவும் கோபமடைந்துள்ளது. இதற்கிடையே துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை இன்று நடந்தது.
முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா முன்வர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி இருந்தார். உக்ரைன் சார்பில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் குழுவுக்கு பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் தலைமை தாங்கியிருந்தார். இந்த நிலையில், நிபந்தனை இல்லாத முழுமையான போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா முன்வர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்த நிலையில் இந்த கோரிக்கையை ரஷ்யா நிராகரித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications