ஆபரேஷன் ஸ்பைடருக்கு பதிலடி.. உக்ரைனுக்கு உக்கிரம் காட்டிய ரஷ்யா! இப்போ புலம்பி என்ன பிரயோஜனம்!

Subscribe to Oneindia Tamil

கீவ்: உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்து வரும் போரை நிறுத்த, துருக்கியில் பேச்சுவார்த்தை நடக்க இருந்த நேரத்தில் உக்ரைன் திடீரென ரஷ்யா மீது 'ஆபரேஷன் ஸ்பைடர் வெப்' என்கிற பெயரில் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதற்கு எதிராக 400, 40 ஏவுகணைகள் என ரஷ்யா நேற்று கொடூர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.

இரண்டு தினங்களுக்கு முன்னர் ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தாக்குதல் உலகம் முழுவதும் பேசுபொருளாகியிருந்தது. ரஷ்யாவின் எல்லயை கடந்து, 4000 கி.மீக்கு அப்பால் இருக்கும், அந்நாட்டின் விமானப்படை தளத்தை குறி வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியிருந்தது. இதில் 41 விமானங்கள் வரை அழிக்கப்பட்டது. இது இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் போரில் ஏற்பட்ட ஒரு முக்கியமான திருப்புமுனை புள்ளியாகும்.

Ukraine Kyiv Russia

ஏனெனில், இந்த தாக்குதல் நடந்து அடுத்த 24 மணி நேரத்தில் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடக்க இருந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட வேண்டும் உலக நாடுகள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில்தான், குட்டையை குழப்பியது உக்ரைன்.

உசுப்பிவிட்ட உக்ரைன்

அப்புறம் என்ன, ரஷ்யா தனது பலத்தை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இப்படியாக நேற்றிரவு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தியுள்ளது. "எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதலுக்கு நாங்கள் கொடுத்த பதிலடி" என்று இந்த தாக்குதலை, ரஷ்ய பாதுகாப்பு துறை விவரித்திருக்கிறது. ஆனால், உக்ரைன் அதிபரோ, "இந்த போரில் இதுநாள் வரையில் இவ்வளவு பெரிய தாக்குதல் நடந்தது இல்லை. 10 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். இது ஒரு கொடூரம்" என்று புலம்பியுள்ளார்.

Ukraine Kyiv Russia

ரஷ்யாவின் உக்கிரம்

தாக்குதலில் 407 ட்ரோன்களையும், 45 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் ரஷ்யா பயன்படுத்தியிருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மற்ற பிற முக்கிய நகரங்களான செர்னிஹிவ், லுட்ஸ்க், டெர்னோபில், ல்விவ், சுமி, பொல்டாவா, க்மெல்னிட்ஸ்கி, மற்றும் செர்காஸி ஆகியவற்றில் இந்த ஏவுகணைகள் விழுந்து வெடித்துள்ளன. இதில் ரஷ்யா இரண்டு வகையான ட்ரோன்களை பயன்படுத்தியுள்ளது.

1. ஷாஹேத் (Shahed)
2. டிகோய்கள் (Decoys)

ட்ரோன் பதிலடி

இதில் முதல் வகையான 'ஷாஹேத்' ட்ரோன்கள் ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கம் திறன் கொண்டது. குறைந்த விலையில் தயாரிக்கப்படும் இந்த ட்ரோன்கள் அதிக தூரம் பயணிக்கக்கூடியவையாகும். உக்ரைனின் குடியிருப்பு பகுதிகள், உள்கட்டமைப்பு, மற்றும் இராணுவ இலக்குகளை, இந்த ட்ரோன்களை கொண்டு ரஷ்யா தாக்கியுள்ளது.

Ukraine Kyiv Russia

குழப்பத்தில் உக்ரைன்

இரண்டாவது வகையான 'டிகோய்கள்' ட்ரோன்கள், உக்ரைனின் வான் பாதுகாப்பு அம்சத்தை குழப்புவதற்காக அனுப்பப்பட்டவையாகும். இதில் ஆயுதங்களோ, வெடி பொருட்களோ இருக்காது. ஆனாலும், இதை பார்த்து உக்ரைன் வான் பாதுகாப்பு அம்சம் குழம்பிவிடும். இந்த கேப்பில், 'ஷாஹேத்' ட்ரோன்கள் தாக்குதலை நடத்தும்.

Ukraine Kyiv Russia

ஏவுகணை தாக்குதல்

ஏவுகணைகளை பொறுத்தவரை, மொத்தம் 45 பயன்படுத்தப்பட்டது. இதில் பல 'Kh-101' க்ரூஸ் வகை ஏவுகணைகள் என்று உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் உள்நாட்டு தயாரிப்பான இது, நீண்ட தூரம் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க பயன்படுத்தப்படுகிறது. மொத்த ஏவுகணைகளில் 6 ஏவுகணைகள், 'இஸ்கந்தர்-எம்' பாலிஸ்டிக் வகையை சேர்ந்ததாகும். கூடுதலாக ஒரு ஆன்டி-ரேடார் ஏவுகணையையும் ரஷ்யா பயன்படுத்தி உள்ளது.

ரஷ்ய தாக்குதலில், மொத்தம் 6-10 வரை உயிரிழந்திருப்பதாகவும், 80 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் கூறியுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+